பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 : லா. ச. ராமாமிர்தம்

மூலத்திலிருந்தே நிழலுடன் ஐக்கியமாகப் பழகினவர்கள். காலடியில் கசங்கிய சருகின் காற்றசைவிலேயே அதை மிதித்தது இரையோ, எதிரியோ, அதன் திக்கையும் விவரங் களையுமே படிக்கத் தெரிந்தவர்கள். அரவத்தை அடக்கி ஆள்பவர்கள். கானகத்தின் மோனத்தை இரவின் நிசப்தத்தை அவை தம்முள் அடக்கிய ரகஸ்யங்களைத் தமக்கு மட்டும் பேச வைப்பவர்கள்.

ஒழுங்கு உடை, கறுப்பு நீலம் கசங்கியிருந்தது. இரும்புக் குண்டு போன்ற உருண்டைத் தலையோடு தலையாய்க் குல்லாய் போன்ற குட்டைப் பொடிச் சுருட்டை மயிர், பெரிய கண்களில் அவன் வந்த இருள் கண்டத்தின் அடவி களின் இருளும் அவைகளில் பதுங்கிய ஆபத்கரமும், இவை யிரண்டையும் மீறி ஒர் அகண்ட சோகமும் கவிந்து விழிகளே அரைக்கண்ணில் சொக்கியிருந்தன. உடல் பூரா விலங்கு லாகவம் சோம்பிற்று.

ஜன்மேதி ஜன்ம நிறப்பகை முகத்தில் சிந்த, இருவரும் எதிர்எதிர் நின்றனர். இடையே இடம் விறுவிறுத்தது.

முதலில் ஆங்கிலேயன்தான் தாக்கினான். நீக்ரோவின் தோளில் பிரம்பால் அடித்தான். உடனே வயிற்றில் ஒரு குத்து விட்டதும் நீக்ரோ வயிற்றைப் பிடித்துக்கொண்டு சுருள்கையிலேயே அவன் முகத்தில் அடுத்தடுத்து இரண்டு குத்துகள். திலோ பயத்தில் உளறியபடி அவர்களிடையே பாய்ந்து பள்ளத்தின் சுவரோரமாய் ஒடுங்கி ஒடிப் போனாள்.

நீக்ரோ தலையை உதறிக்கொண்டான். மூக்கிலிருந்து ஒரு சிவப்பு நூல் புறப்பட்டது. மறுபடியும் வெள்ளையன் கை வீச இடம் கொடாமல் அவனை இரு கைகளாலும் அணைத்தான். நீக்ரோ இரண்டு அங்குலம் கூடவே உயரம்.