பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 & லா. ச. ராமாமிர்தம்

கூட யுக நேரம் கண்டது. பார்வை நிலையுற்றதும் கையில் ரிவால்வரும், அதன் குழாயினின்று சுருண்ட புகைநூலும் புதிதாயிருந்தன. துப்பாக்கியைப் பான்ட் பையுள் திணித்துக் கொண்டான். தலை மயிருள் கைவிட்டுக் கோதிக் கொன் டான். வேர்வை கொட்டிற்று. பிரம்பு போன இடம் தெரிய வில்லை. அதுபற்றி நினைவுமில்லை. உடல்பூரா, ரணமாய் வலித்தது.

நீக்ரோவின் உடல் மேல் கால் வைத்து ஏறி-இட மில்லை-தாண்டுகையில் கடைசி வலிப்பில் நீக்ரோவின் உடல் புரண்டு நீண்டதும் வெள்ளையனுக்குக் கால் பிசகி இரண்டு கைகளும் பிடிக்கு அந்தரத்தில் துழாவின.பிடரி, பள்ளத்தின் கோணத்தில் பலமாய் மோதிய வேகத்தில் அதன் சிமெண்ட் கூரில் கழுவேறிற்று. கால்கள் தரை யில் படாமல் உடல் தொங்கிற்று. கால்கள் உதைத்துக் கொண்டன.

ஆகாய நீலத்தைக் கட்டாயமாய் மல்லாந்துவிட்ட முகத்தில் மாலைச் சூரியன் கண்களை நேரே பறித்தான். மேலே வேகம் படப் பெருகிக்கொண்டே வரும் அவனுடைய தனியிருளில், மரணாவஸ்தையையும் தாண்டி, பல ஆயிரங் கல் தூரமும் நேரமும் தாண்டிவிட்டு வந்திருக்கும் காதலி யின் முகத்தைக் கடைசி நினைவு, முழு முயற்சியுடன் கூட்ட முயன்றது.

ரேடியோவைத் திருப்பிவிட்ட முழு இரைச்சலில்

“In the mirror of my eyes

Lemme feel the see of you as you’d be seeing you in my eyes!”

என்கிற பாட்டுக்கு ஏற்ப