பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ராசாத்தி கிணறு ❖ 9


இருந்தாலும் சாயந்திரம் உழுதுட்டுக் கழனிக்கட்டுலேருந்து
வந்ததும் வெந்நீரை எதவா விளாவி முதுகைச் சுரண்டித்
தேய்க்கப் பெண்சாதி மாதிரி ஆவுமா? அவனே கண்டுக்கப்
போறான். ஆனால் மொத்தத்தில் இந்த சந்நியாசிங்க வந்து
ஊரே கெட்டுப் போச்சு. கிழவனையும் முழுக்கக் குத்தம்
சொல்லறதுக்கில்லே.

இப்படி அவர்களே சமாதானம் சொல்லிக்கொண்டு
விஷயத்தை ஆரவாரமில்லாமல் அமுக்கி விடுவதே அவர்
களுக்குச் சுளுவாயிருந்தது பாந்தமாயிருந்தது. அதில்
எல்லோருடைய ஒத்துழைப்புமிருந்தது. ஏதோ நியாயம் கூட
இருந்தது.

கிழவன் நீளத்திண்ணையில் படுத்துப்புரண்டு கொண்
டிருந்தவன் என்ன தோன்றிற்றோ, எழுந்து, மலையேறி
குகைக்கெதிரே நின்றான்.

“அண்ணாத்தே!”

உள் அடர்ந்த கருமையிலிருந்து நிர்வாணப்பரதேசி
உருவானான்.

“தூக்கமில்லாட்டாப் போவுது. இமை மூட மாட்டேன்
குது. நீதான் வழி சொல்லணும். இப்பவே பைத்தியம்
பிடிக்கிறமாதிரிதான் இருக்குது. இன்னும் காலத்துக்கும்
என்ன செய்யப் போறேனோ தெரியல்லியே!” பரதேசி குகை
வாசலில் அமர்ந்து கிழவனையும் பக்கத்தில் குந்தச் சொன்
னான். இருவரும் மெளனத்திலிருந்தனர். சூழ்ந்த பாறைகள்
அவர்களுடன் ஏதோ பேச முயன்றன. ஆனால் கிழவனுக்கு
அவைகளின் பேச்சு கேட்கவில்லை.

‘கண்ணிர் வறண்டு போச்சி. இன்னும் எத்தினி
நாளைக்கு இப்படியிருக்கும்?’

“அந்தப் பெண் பிள்ளை ஒரு தப்பும் செய்யாமலே