பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 : லா. ச. ராமாமிர்தம்

ஆழமாக வேரோடி விட்டது. இனி அதைத் தகர்க்க முடியாது.

கொஞ்ச நாளாவே, ஏதோ ஒன்று அவளைத் தன்னுள் இழுத்துக் கொண்டிருப்பதாக உணர்வு. நாளுக்கு இம்மி, அந்த உறையுள் புதைந்து, கடைசியில் ஒருநாள் அது என்மேல் மூடிவிடும். மார்பில் ஏதோ கல்லாய் கனத்தது. ஆனால் உடல் கோளாறு இல்லை, நிச்சயம்.

மனப்பாரம்.

கீதா, +2வை எட்டிப் பிடித்திருந்தாள். அவள் பார்வை யாயிருப்பதற்கு நிச்சயமா வேலை கிடைக்கும். ஆஹா ஒஹோன்னு இல்லாட்டாலும் கிடைக்கும். ஆனால் போக மாட்டாளே! அவளுக்கு எங்கே நேரம்? அவளைச் சுற்றித் தான் ஈக்கூட்டம் ஒன்று மொய்த்துக் கொண்டிருக்கிறதே! பெண் ஈக்களையும் சேர்த்துத்தான்.

“கீதா, நீ பண்றது ஒண்ணும் நன்னாயில்லே. நெருப்போடு விளையாடறே!”

‘இதென்னம்மா, நீ ஒருத்தியே போதும் போல இருக்கே: இவாளை நான் வரச் சொன்னேனா என்னையே சுத்திண் டிருக்கச் சொன்னேனா?

“ஓஹோ! உன் இமைகள் படபடக்கறதும், கன்னம் சிரிக்கிறது, விரல்கள் திடீர் திடீர் கோத்துக்கறதும், அபிநயம் காட்டறதும், பூமியைக் கால் தட்டறதும்-நீ இன்னு வாய் திறந்து முத்து மொழியணுமா வாங்கோ வாங்கோன்னு!”

‘அம்மாவைப் பாரேன்!” கீதா தட்டாமாலை சுற்றிச் சந்தோஷத்தில் கொக்கரித்தாள். இதனால் என் கற்பு எரிஞ்சு போயிடுத்தா அம்மா?”

‘மூடு வாயை!”