பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

மெத்தென்று ஒரு முத்தம் * 185

தயக்கம். உடனே அம்மா: “அவளைப் பத்தி என்ன சொல்லச் சொல்றேன்? அவள் அவ்வளவுதான்.”

“என்னடி சொல்றே? அப்பாவின் குரல் வெகுண் டெழுந்தது.

“இதோ பாருங்கோ. நம்மையே இன்னும் ஏமாத்திண் டிருக்க வேண்டாம். கோமதியே இப்போ தன்னைப் பத்தித் தெரிஞ்சுண்டிருப்பாள். இந்தமாதிரி கல்யாணமே ஆகாதவா, கன்னியாவே காலமாயிடறவாளை-இவாள் விஷ்ணுக்கு நாச்சியார்னு பொம்மனாட்டிகளுக்குள் ஒரு சொல் உண்டு. ஆண்டாள் மாதிரின்னு வெச்சுக்கோங்களேன்.”

“கொடுரமாப் பேசாதேடி, அவளைப் படைச்சவன், அவளுக்கென்று ஒருத்தனையும் படைசிச்சிருப்பான்.”

“நீங்கள் இப்படியே நம்பிண்டிருங்கோ. கூடவே “கல்லினுள் தேரைக்கும் பாட்டைப் பாடிண்டிருங்கோ.”

பேச்சு சட்டென்று அடங்கிவிட்டது. அம்மா திரும்பிப் படுத்துத் தூங்கிவிட்டது, அப்பா இரு கைகளாலும் தலை யைத் தாங்கிக் கொண்டு உட்கார்ந்திருப்பது, மனக் கண்முன் வந்து நின்றது.

இப்பவே போய், “அப்பா, நீங்கள் எனக்குப் பிள்ளை பார்க்க வேண்டாம். கீதா கல்யாணம் நடக்கட்டும்.” என்று சொல்லிவிடலாமா? அவர்கள் பேச்சை அவள் கேட்டு விட்டது தெரிஞ்சிடும். அவாளுக்கு உடனே முகமில்லாமல் போவதைப் பார்ப்பதில் என்ன சந்தோஷம்?

அனுபவி, அனுபவி மெளனமாய் அனுபவி. ஒருசமயம் கிராமத்தில், பாட்டியாத்துக்குப் போயிருந் தப்போ

வீட்டுக்கெதிரே குட்டி மைதானம். அதில் ஒர் ஆலமரம்.