பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

மந்த்ரஸ்தாயி

திடீரென இமைகளுள் ஒளியின் வெள்ளப் பெருக்கில் விழிப்பு வந்ததும், கூடமே ஒரு பெரிய புஷ்பமாக மிருது வான வெளிச்சத்தில் மலர்ந்திருந்தது. சுவரோரமாய் கண்ணன் சைக்கிளுக்கு ஸ்டாண்டு போட்டுக் கொண்டிருந் தான். அவன் வந்ததுகூடத் தெரியாமல், தூக்கம் அசத்தி யிருக்கிறது.

அவனே கதவைத் திறந்து கொண்டு வந்தது ஆச்சரிய மில்லை. அவனிடம் ஒரு சாவியிருந்தது. மறுசாவி மருமகளிடம். -

என்னைப் பார்த்துப் புன்னகை புரிகிறான். கண்ணன் ஒரு வரப்பிரசாதி. இரவு எந்நேரம் விழித்திருந்தாலும், எவ்வளவு ட்யூட்டியிலும், வீட்டிலும் உழைத்தாலும், குடம் குடமாய் தண்ணிர் வெளியிலிருந்து எடுத்தாலும் அவனிடம் களைப்புத் தெரியாது. அப்போதான் குளித்தாற் போல் ஒரு fiesiness. வயது மட்டும் தாக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு மனமே குளித்திருக்கிறது.

ஒற்றை விரலைக் காட்டுகிறான். குல்லாயை மாட்டு கிறான். இங்கு பொல்லாத குளிர். குளிர் நிறைவோ, குறைவோ, கண்ணனின் சிறகணைப்பில் குல்லாய், எங்களிடையே ஒரு சடங்காகவே நிலைத்துவிட்டது.

வாசலுக்குப் போய், மேடு விளிம்பில் நிற்கிறேன்.