பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 : லா. ச. ராமாமிர்தம்

கிறான். பர்வீன்சுல்தானா உச்சஸ்தாயி பிர்க்கா பீச்சியடிக் கிறது. அந்த நள்ளிரவு வேளையில் நாதகிண்கிணிகள், அவைகளின் தனித்தனி வேகத்தில், கற்கண்டில், இதயத்தின், நெஞ்சின், மூளையின் கண்ணிகளுள் உருண்டோடி, அங்கு மிங்குமாய் புதைந்து கொள்கின்றன.

கண்ணனுக்கு ட்ராமா செய்யப் பிடிக்கும். Suspense Suspense!!” “ஒவ்வொரு நிமிடத்திலும் ஒரு எதிர்பாராத வேளை, ரஹஸ்யம் ஒளிந்து கொண்டிருக்கிறது. தக்ணுண்டு சாமிக்குத் துக்ணுண்டு நாமம். குந்து மணியில் கறுப்புப் புள்ளி. ஆனால் பிள்ளையார் கண்ணில் புதையுங்கள். முழி வந்து விடுகிறது. பாருங்கள். அதுதான் Suspense You See what l mean? அதுவே தேடல் தத்துவம். நிமிஷத்தைப் பிழிந்தாக வேண்டும் அப்பா!”

அவன் அப்படிச் சொல்கையில் உடம்பில் சருகுகள் துளிர்ப்பது போல் எனக்கு லேசாய்ப் பரபரக்கிறது. அவன் உற்சாகம் ஒரு தொற்று.

அடுப்படியில் ஏதோ திரிசமம் பண்ணிவிட்டு, ஒரு கையில் ஆவி பறக்கும் தம்ளர், மறுகையில் கரண்டியுடன் வருகிறான். தம்ளரை பக்கத்தில் ‘ஸ்டு’லில் வைத்துவிட்டு, என் முகத்தை நிமிர்த்தி, வாயில் கரண்டியில் உள்ளதை விடுகிறான். தாய்ப் பறவையின் பரிவில் அவனுக்கு வாய், மொக்கு திறந்து கொள்கிறது.

ஆ, பால் ஏடு! சர்க்கரையுடன் ஏலக்காய் மணம்! பாஸந்தி செய்வது.சிக்கலான சமாச்சாரம். ஆனால் பாஸந்தி என்று நினைத்துக் கொண்டால் இதுவே பாஸந்தி. எனக்குப் பால் என்றால் உயிர். இங்கு பால், கறந்த நாணயத்தில் கிடைக்கிறது.

டாக்டர் கட்டளை: