பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 : லா, ச. ராமாமிர்தம்

கொண்டிருக்கிறேன். இன்று நிச்சயமாய்க் கண்ணன் காய்ச்சப் போகிறான். “முதலில் வெளியில் கிளம்ப யார் அனுமதி தந்தது?” என்று ஆரம்பித்து, “உங்கள் வஸ்தாத்தன மெல்லாம் இங்கேதான் காண்பிக்கணுமா? ஆமா, உங்கள் உத்தேசம்தான் என்ன? வந்த இடத்தில் என் மேல் ஒரு அபாண்டத்தைச் சுமத்திட்டுத்தான் போவோமே என்றா? என்று இன்னும் எங்கெங்கோ போய்க் கொண்டிருப்பான். பாசத்துக்கு முதல் பலி மரியாதை என் சமாதானங்கள் செல்லாது. எனக்குத் தெரியும்.

பட்டணத்தில் கடிதம் மூலம் பரிச்சயம் ஆன ஒரு ரசிகனைக் காண வாணியம்பாடிக்குப் போய், அவன் வீட்டில் இல்லாத ஏமாற்றத்துடன் திரும்பி வரும் வழியில் பஸ் பிரேக் டெளன். சரி இன்னும் இரண்டு மைல்தானேவழியில் யாரோ சொன்னது-ஆனால் நடக்க நடக்க, தூரம் மைல் மைலாய் நீண்டு கொண்டே போகிறது. கால் மணி நேரத்துக்கு ஒரு பஸ் பறக்கும் இந்த ரோட்டில், பழியாய் ஒரு மணி நேரமாய் ஒதுர் நோக்கி ஒரு பஸ் கூடக் காணோம். சட்டென என்னை உராய்ந்தாற் போல் ஒரு ஸ்கூட்டர் ‘பிரேக் போட்டு நின்றது.

“ஏறுங்க ஸார் போகலாம்.” திகைத்து நின்றேன். “கண்ணன் அப்பாதானே நீங்க, ஏறுங்க!” “ஆமா, என்னை எப்.ப.டி?” என்று குழம்பினேன். “உங்களை நல்லாத் தெரியும் ஸார்-பத்திரிகைகளில் உங்கள் போட்டோ பார்த்திருக்கேன். கண்ணனும் நானும் ஒரே ஆபீஸ். இந்த நடையில் எப்போ வீடு போய்ச் சேருவீங்க?-சரியா அட்ஜஸ்ட் ஆயிட்டிங்களா? கிளம்ப

6}}ff LOff”.