பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்த்ரஸ்தாயி : 205

“பார்த்தீங்களா ஸார்? Wrong side.. அவங்களுக்கே நல்லாத் தெரியும். நம்ம என்ன செய்ய முடியறது? பணம் படைச்சவங்க என்ன வேணும்னாலும் செய்யலாம். எப்படி யானும் இருக்கலாம்.”

என் கவனம் அவன் பேச்சில் முழுக்க இல்லை. அந்தச் சிரிப்பு-உடம்பில் ரத்தத்தைச் சுண்ட வைத்து, வயிற்றைக் கலக்கும் சிரிப்பு.

அடுத்து அல்ல, அந்தக் கணமே அல்ல அப்படி எண்ண, எண்ணுவதற்குத் தோன்றக் கூட நேரமில்லைஎதிரே ரோட்டின் சரிவினின்று அந்த மொத்தாகாரம் எங்கள் முன், எங்கள் மேல் ஒன்றையொன்று விலக்க இரண்டுக்குமே நேரமில்லை. இடமுமில்லை, முடியவும் முடியாது.

நான் என்னவானேன்? எனக்கு முன்னால் என் உயிர் “வெல்லம் பேசிவிட்டது. “பைக்’கிலிருந்து தாவி விட்டேன். என்னால் முடிந்திருக்காது. உயிர் வெல்லத்தினால்தான் முடிந்திருக்கும். ரோட்டின் பக்கவாட்டுப் பள்ளத்தில் விழுந்து சரிந்து உருண்டேன். கால் கட்டை விரல் திரும்பிக் கொண்டது. ஆனால் அப்போ தெரியாது.

யதார்த்தத்தைப் பிட்டுக் காண்பிக்கிறேன் என்று கோரத்தை அடுக்கடுக்காய் விவரிக்கும் எழுத்து பெரிய எழுத்து ஆகி விடாது. அந்த எழுத்துக்கும் அது விவரிக்கும் சம்பவத்துக்கும் அனுமானமில்லை. எப்படியும் அது என் வழி அன்று.

‘பைக்’ துவையலாகியிருந்தது. ஒட்டியவன் நிலைமையை யூகித்துக் கொள்ளுங்கள். சிதர்கள் கூட முழுமையில் சேர்க்க முடியவில்லை. போஸ்ட் மார்ட்டம் என்று எதை வைத்துக் கொண்டு செய்தார்களோ?