பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 5


ஆத்மன் & 215

கதாதரர்தான் பகவான் ராமகிருஷ்ணர் ஆனார். நரேந்திரர்தான் விவேகானந்தர் ஆனார். வெங்கட்ராமன்தான் ரமணமகரிஷி ஆனார். இப்படி விவரித்துக் கொண்டே போகலாம். பாரதத்தில் அவ்வப்போது அவதாரபுருஷர்களுக்குக் குறைவேயில்லை. இந்த 1920 நூற்றாண்டிலேயே எவ்வளவு பேரைப் பார்த்துவிட்டோம்.

ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணமகரிஷி, அரவிந்தர், பாரதி, ஸங்கீத மும்மூர்த்திகள், காந்திஜி, காஞ்சி மஹாப் பெரியவாள், பகவான் ரஜ்நீஷ். இன்னும் எத்தனை பேர் தாமிருக்குமிடம் கூடத் தெரியக்கூடாது என்று குகை களில், காடுகளில் தவத்தில் ஆழ்ந்திருக்கிறார்களோ!

ஆன்மீகவாதிகளை மட்டும் இங்கு சொல்கிறேன். அறிவியல் மஹான்களிடம் போகவில்லை. ஆனால் அவர் களும் தேடல் தத்துவத்தில் சேர்ந்தவர்கள்தான்.

எங்கிருந்து வந்தோம்?

ஏன் வந்தோம்? எங்கே போகிறோம்.

நான் யார்?

அம்மா! அம்மா!! கேள்விகள் எத்தனையோ அத்தனை பதில்கள். பதில்களை பயக்கும் மீண்டும் கேள்விகள். உயிர்த்தாது உண்டானது முதல் காலாந்த காலமாய் தன்னைத்தானே படைத்துக்கொண்டு பஞ்சபூதங்களை நீரில் வாழ்வன, நிலத்தில் வாழ்வன, நீரிலும் நிலத்திலும் வாழ்வன, தாவரம், ஜங்கமம் எனப் படிப்படியாக தடங்கள் உயர்ந்து மனம் படைத்ததால் மனிதன் எனும் பதவிக்கு உயர்வதற்குள்