பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 & லா. ச. ராமாமிர்தம்

காலம் எத்தனை வரைகள் தாண்டியிருக்கும்! நினைப்ப தற்கே அசாத்யமாயில்லை? ஆனால் எல்லாவற்றுக்கும் காரண, காரியகர்த்தா உண்டு.

The Wisdom of India, Asia and China Tojib Lo) Lin it Tang எழுதுகிறார். ‘கடவுள் தன்னை முன்னால் படைத்துக் கொண்டு பிறகு உலகத்தை சிருஷ்டிக்க ஆரம்பித் தார். அவர் கூற்று நம் வேதங்களினின்று எடுத்ததுதான். ஆனால் சொல்லும் வகையில் நான் ஈர்க்கப்பட்டேன். என் வயது அப்போது அப்படி எங்கிருந்து வாங்கிக் கொண்டால் என்ன? தசாவதாரங்களை நம் புராணங்கள் சொல்ல associocoust? The theory of evolution s5th Lossrooro&sj6; தோள் கொடுக்கிறது.

ஒன்று. ஜீவனின் சரிதையுடன் மனிதன் உண்டான திலிருந்து மானுடத்தின் சரித்திரம் இணைந்து இங்கிருந்து ஆரம்பமாகிறது. நினைக்கவே, சொல்லிக் கொள்ளவே எத்தனை சந்தோஷமாய் இருக்கிறது! நான் மனிதன் உய்ய வும் உய்விக்கவும் என்னைக் கண்டு கொள்ளவும் இவ் வுலகுக்கு வந்திருக்கிறேன். உயிரின் இயக்கம், மனிதப் பிறவி யிலிருந்து அர்த்தம் கொள்ள ஆரம்பித்துவிட்டது

பகவான் ராமகிருஷ்ணரின் உபதேசங்களால் ஈர்க்கப் பட்டு, அவரைப் படித்தவுடன் நான் பக்தனாகிவிடவில்லை. நான் எழுத்தை சாதகம் செய்பவன். இன்னமும்தான். அந்த வழியில் அவருடைய சொல்லின் இலக்கியத்தன்மையில் அசந்து போனேன். அந்த எளிமை, சொல்லாழம் ஊடவே ஒடும் அப்பாவித்தனம், அதே சமயம் விஷய அதிகாரம் மோஹனமந்தாரமாய்க் கவியும் ஒரு விசனம் (எனக்கு வேறெப்படி என்று சொல்லத் தெரியவில்லை) இந்த அம்சங்களை நானும் என் எழுத்தில் கொண்டு வர முடியுமா? இதுதான் என் முதல் கவலையாக எழுந்தது.