பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஆத்மன் & 217

ஒரு சக தொழிலாளி என்று கூட அவரை நான் சொல்லிக் கொள்ள முடியாது. சரியாக எழுத்து வாசனைகூட இல்லாத ஆசாமி தான் பிறந்து வளர்ந்த ஊர், சுற்றுப்புற சூழ்நிலை, தrனேஸ்வரத்தைத் தாண்டி வெளியூர் என்று சென்றது கூட கிடையாது. ஆயினும் முதிர்ந்த அனுபவம் தோய்ந்த உண்மைகள், ஸ்வாரஸ்யமான சம்பவங்கள் எப்படி அந்த வாயினின்று அவ்வளவு அனாயசமாக உதிர்கின்றன? இது விடாமுயற்சி, சாதகம், முன் தயாரிப்பது மட்டும் சாத்ய மாகாது. இதற்குத் தனி அருள் வேண்டும். இவர்கள் சேதி சொல்ல வந்தவர்கள். ஸம்பவாமி யுகே யுகே புருஷர்களைச் சேர்ந்தவர்கள்.

கைகளைக் கோர்த்தவண்ணம் மடியில் வைத்துக் கொண்டு கூடிவரம் செய்யாத முகத்துடன் நம்மைப் பார்க்கும் நிலையில் உள்ள ராமகிருஷ்ணரின் படத்துக்குத்தான் நாம் அதிகம் பழக்கப்பட்டவர்கள். ஆயினும் உன்னிப்பாய் பாருங்கள். மனிதன் நம்மைப் பார்க்கவில்லை. பார்வை உள் நோக்கில் திரும்பியிருக்கிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்ட காவிய விசனம், நெற்றியில் காண்கிறேன். அவர் கொணர்ந்திருக்கும்-நம்முடன் பங்கிட்டுக் கொண்டிருக்கும் சேதியுடன்தான் அவர் உறவு.

அல்லது இன்னொரு படம். தன்னை மறந்த ஆனந்தக் கூத்தில் ஆடிக் கொண்டிருக்கிறார். அதே தாடி, அதே குழந்தை முகம், அதில் அவர் கண்டு கொண்டிருக்கும் தரிசனத்தின் மேல் வெறி.

இந்தக் குழந்தைத்தனத்துடன் இத்தனை விவேகத்துடன் ஒரு மனிதன் சாத்யமா என்று நான் அவர் சரித்திரத்துடன் பரிச்சயமானதிலிருந்து இன்னும் வியந்து கொண்டிருக் கிறேன். .

ஹனுமானைப் பற்றியும் எனக்கு இந்த ஆச்சர்யமுண்டு.