பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்மன் & 219

நம அந்தப் பேருண்மையை எந்தக் கோணத்திலும் ஆதி சங்கரராலும் மறுக்க முடியாது. அம்பாளை ஸ்தோத்தரிக்கும் ஒரு இடத்தில் சொல்கிறார். “அம்மா ஸ்திரியில் கெட்ட ஸ்த்ரி என்று இருக்கலாம். ஆனால் தாயாரில் கெட்ட தாயார் என்று உண்டோ? இந்தக் கேள்விக்கு தெய்வமும் தோற்றுப் போக வேண்டியதுதான்.

ஆகவே ராமகிருஷ்ண சரிதத்துக்கு மறுபெயர் அன்னை யின் காவியம் என்பேன்.

உயிர் மனிதப் பதவிக்கு வந்தவுடன் (மனம் படைத்தத னால்தானே மனிதன்) சதா-ஏன் தூக்கத்திலும் கூட (கனவு மூலம்) எண்ணிக் கொண்டேதானிருக்கிறது. எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணிப் புண்ணானாலும் எண்ணங்கள் ஒய்வதில்லை. மனம் எண்ணம் படைக்கும் கருவி. கங்கோத்ரியிலிருந்து பன்றித் தொழுவம் வரை அதன் வரைக்கு எல்லையே இல்லை. அது ஒரு நிலை.

அந்த மனத்திலிருந்து அறிவு எனும் பகுதிக்கு எண்ணம் உயர்ந்து நல்லதுக்கும் கெட்டதுக்கும் பயனுள்ளதும், அற்றதும், சுத்தத்துக்கும், அசுத்தத்துக்கும் இந்த பேதங்களை அவையவை இடத்தில் இருத்தி அதன்படி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள முயல்கிறது. இடையே சந்தேகங்களுக்கும் தான் பாகுபடுத்தியதையே மறுப்பு களுக்கும் உழற்சிக்கும் ஒய்வில்லை. இந்த நிலை மரணம் வரை நீடித்தாலும் ஆச்சர்யமில்லை. இடையிடையே அற்ப சந்தோஷங்களைத் தாண்டி ஆசைவிட்ட குழப்பத்திலிருந்து விடாப்பிடியாக வழிதேடிக் கொண்டிருந்தால் ஞானம். அடுத்தபடி அதாவது தெளிவு, பக்தி, விக்ரஹ ஆராதனை, பூஜை புனஸ்காரம், விரதம், ஞானத்திற்கு வழிகாட்ட உதவும்.

பக்தி என்பதே என்ன?