பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ராசாத்தி கிணறு ❖ 13


யும் நெனைச்சுக்கலாம். அதுல ஒண்ணும் தப்பில்லே.
தண்ணி காணுவோமா இல்லையான்னு சந்தேகம் படக்
கூடாது. சந்தேகமே பாதி பலத்தை வாங்கிடும். தண்ணி
காணுவே நிச்சயம். அது எனக்குத் தெரியும். அதுக்கெல்லாம்
கவுளி எனக்கு அடிக்க வேணாம்” ஆவேசம் கண்டவனாய்
பரதேசி பேசினான். “என்னிக்கு எப்போன்னு சோசியம்
எல்லாம் கேக்காதே. தோண்டியே செத்துப்போ. ஒருத்தரும்
அறியாமல் உன் பெண்சாதி உன் கையாலேயே மாளல்லயா?
அதை நெனைச்சுக்கோ. அதுதான் இப்போ உன்னுடைய
பலம். காரியத்தை ஆரம்பிச்சுட்டு பாதியிலே விட்டேன்னா,,br> உன் பாவம் உனக்குக் கூடுது. வேறென்னத்தை நான்
சொல்ல? இந்த மாதிரி கோழைங்களாலேதான் உலகத்துலே,br> பாவம் கூடுது. உலகம் இயங்கிக்கிட்டே போவுது. எத்தனை
நல்லவங்க உலகத்தின் நல்லத்துக்காகவே பிறந்து பாடுபட்டு
உழைத்து செத்தாலும் என்ன பிரயோசனம்?

கிழவனுக்கு எல்லாமே புரிந்ததோ இல்லையோ. பரதேசி
யின் ‘வேகம் தன்னுள் புகுந்து பரவுவதை உணர்ந்தான்.
நிமிர்ந்து பார்க்கையில், பரதேசியைக் காணோம். இருளில்
கரைந்து போய்விட்டான்.

மறுநாள் காலை. சோறும் தண்ணியும் உண்ணுட்டு
ஒரு தோளில் கடப்பாறையும் மறுகையில் மம்முட்டியும்,
அக்குளில் கோடாரியையும் அடக்கிவிட்டு கிளம்பினான்.
மருமகளும், மகனும் சற்று எட்டக் கவலையுடன் பின்
தொடர்ந்தனர். ‘மாமா இப்போ என்ன செய்யப் போறாரு
தெரியல்லையே! மாமா நேத்தியிலேருந்து பேசவே இல்லை.
பேச்சுக் கொடுக்கவும் பயம்மாயிருந்தது. மாமா மாறிட்டாரு.
மருமகள் தன் கையிலே சின்னச் சொம்பில் பாலு வெச்
சிருந்தா. பால் கிடைக்கறது சுலபமாயில்லை. நிறைய பச்சைத்
தண்ணி இருந்தாலும் இன்னிக்குப் பாலாச்சே! ஊத்தி
யாவணுமில்லே!