பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்மன் & 221

என்கிறேன். ஆனால் எத்தனை பிறவிகளாய் இந்த வேளைக்கு காத்திருந்தேன் என்பதை எவ்வாறு அறிவேன். எல்லா வேளைகளும் விதிக்கப்பட்டவை என்றே என் துணிபு. காலத்தை இரவாலும் பகலாலும் அளப்பது இங்கு சாத்தியமில்லை. என் வேளை வரும்போது நான் உய்வேன். இதுதான் மானுடத்தின் குரல்.

தரிசனம் என்பது பார்வையின் நிறைவு. ப்ரக்ஞை(awarness)யின்.விழிப்பு. ப்ரக்ஞையின் விழிப்பு அவ்வப்போது நேர்ந்து கொண்டு தானிருக்கிறது.

அதனால் தரிசனத்தில் அகத்தின் ஒளியை அதிக மாகவே காண முடிகிறது. -

இத்தனைக்கும் கச்சாப் பொருள் மனம். மனமும் ஒயாமல் மனதிலிருந்து எவ்வளவு தூரம் தனி மனிதனா லேயே வர முடியும். வந்துவிட்டான் என்பதை உணர்வதே தரிசனம்தான். ஆனால் இந்த மனப்பயிற்சியின் பிரயாணம் வெறும் தன் முயற்சியால் மட்டுமே நிகழ்ந்து விடாது. குருவின் வழி நடாத்தல் வேண்டும். கூடவே தெய்வத்தின் அருளும் வேண்டும். அருள் என்றால் என்னவென்று சொல்வது? நம் ஆசைகள், ஆசைகளின் உந்துதல்கள் விடா முயற்சி இத்தனைக்கும் அப்பாற்பட்ட பிரதேசத்தினின்று மனிதப் பாரம்பர்யம் தன் சத்தாய்ச் சிறுகச் சேர்த்த திரண்ட ஆசி என்று சொல்லலாமா? இல்லை. பற்றவில்லை. இத்தனைக்கும் அப்பால் நம்மைக் கணித்துக் கொண்டே யிருக்கும் சக்தியின் அபூர்வமான மனதுக்குக் கூட உணர முடியாது. ஒரு சைகை “நான் இருக்கிறேன் துணை.”

அற்ப விஷயம்தான். என்னைப் பற்றி சொல்கிறேன். நான் எழுத்தை சாதகம் செய்யும் ஆரம்ப நாட்களில் இந்தப்