பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 & லா. ச. ராமாமிர்தம்

புத்தகத்தைப் படி அவர் எழுதியிருக்கும் வழியை கவனித் தாயா? காலுக்கடியில் முளைத்திருக்கும் புல்லைப் பார்த் தாயா? ஆகாயத்தை அண்ணாந்து பார். உன்னைச் சுற்றி யிருப்பதைக் கவனி என்று வாழ்க்கை நயத்தையும் சொல் நயத்தையும் உணர்த்த அவ்வப்போது பெரியவர்களும், சின்னவர்களும் ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் வழி காட்டிப் போனார்கள். அதை அருள் என்பேன். என் அதிர்ஷ்டம் என்றும் சொல்லிக் கொள்ளுங்கள்.

இம்மாதிரி வாய்ப்புகள் கதாதரருக்கும் குறைவில்லை. அன்னை அவருக்கு முதலிலேயே தன்னைக்காட்டி ருசியை ஏற்படுத்திவிட்டாள். அதுவே அவள் அருள்தான். அவர் சாதகம் பூரணிப்பதற்காக அவ்வப்போது தவத்தில் அவர்கள் தனித்தனி வழியில் முதிர்ந்தவர்கள். சொல்லி வைத்தாற் போல் அந்தந்த கட்டத்தின் அடுத்தபடிக்கு அவரைப் பழக்கி வழிகாட்டிவிட்டு, வந்தபடியே போய்விட்டார்கள். அதுவும் அருள்தான். நடக்க வேண்டிய ஒரு சங்கல்பம். அதன் உரிய முறையில் நிறைவேறுவதிலேயே ஒரு சான்னித்யம் இருக்கிறது. ராமகிருஷ்ணர் ஒரு சான்னித்யன். அடிப் படையாக அவர்மேல் நம்பிக்கை அவருக்கு ஆதரவும் கடைசிவரை பிழறாமல் அவர் தன் நிறைவு அடைந்து பாதுகாத்துக் கொண்டிருந்த ராணி ராஸ்மணி தேவியும், மதுர்பாபுவுமே ராமகிருஷ்ணருக்குக் கிடைத்த அருளின் சான்றுகள்தாம்.

தரிசனம் என்பது என்ன? எப்படி? எப்போது நேர்கிறது? எனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தைப் பணிவுடன் சொல்லலாமா?

அப்போது எனக்கு வயது 14 ஒருநாள் இரவுவேளை. சாப்பிட்டுவிட்டு எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண் டிருந்தோம். ராமகிருஷ்ணரைப் பற்றி-பேச்சு எப்படி அந்தப்