பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்மன் & 225

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அவனவன் நம்புவது. இஷ்டத்தையும் பக்குவத்தையும் பொறுத்தது. நம்பினவருக்கு நடராஜா. நம்பாதவருக்கு யமராஜா என்கிற பழமொழி ஒரு பக்கமிருக்கட்டும்.

இதெல்லாம் நிஜமா பொய்யா என்ற கேள்வி ஒருபுற மிருக்கட்டும்.

கற்பனையா? சரி. அப்படியே இருக்கட்டும்.

தியானத்தில் கற்பனைக்கு இடம் கொடுக்க வேண்டும் என்கிறார் ஆதிசங்கரர்.

உண்மையில் கற்பனை என்பது என்ன? என் எழுத் தனுபவத்திலிருந்து சொல்கிறேன்.

கற்பனை. ஆங்கிலத்தில் imagination. இந்த சொல்லுக்கு வேர்ச்சொல் image உருவம். அனுமானத்தில் சில எண் ணங்கள் உருவம் பெறுகின்றன.

எண்ணங்கள் அழகிய எண்ணங்கள்.

அழகில்லாமல் உபாஸனை, வழிபாடு, சடங்குகள் என்ன பயன்.

Whatis truth? Pontius Pilate G51 SpTgr (St. John, New Testament)

TRUTH IS BEAUTY - KEATS

What is Beauty?

இதை நிர்ணயிக்க முடியுமோ?

செயலில் அழகு. நடை உடை பாவனைகளில் அழகு.

தொடர்ந்த ஆச்சார சீலத்தினால் காயத்ரி ஜபத்தினால், மெளனத்தினால் தானே முகத்துக்கு ஏறிவிடும் களை இவைகளை நான் உண்மையான அழகு என்பேன்.