பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 ல் லா. ச. ராமாமிர்தம்

எழுத்தின் மூலம் நான் அழகைத் தேடுபவன். நான் செளந்தர்ய உபாசகன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு வெட்கமில்லை. அதற்கே ஆசைப்படுகிறேன். செளந்தர்யம் உனக்குக் கிட்டிவிட்டதா? தெரியாது. அழகிய எண்ணங்களை எண்ணுவதிலேயே ஒரு தனி இன்பம் இருக்கிறது.

விசாரணையில் பைலேட் இயேசுவைக் கேட்கிறான். “நீ யூதர்களின் ராஜாவா?”

இயேசுவின் பதில். “நான் சொல்லவில்லை. நீ சொல் கிறாய்.”

இந்தக் கூற்றின் உள்ளர்த்தத்தை நான் இப்படித் தீர்மானிக்கிறேன்.

அவரவர் எப்படி நினைக்கிறார்களோ அப்படித்தான் உண்மை.

அவரவர் பூத்ததற்குத் தக்கபடி.

மீண்டும் கற்பனைக்கு வருகிறேன்.

பின்னால் நிகழப் போவதன் முன் தரிசனம் அனுமானத்தில் உதயமாகிறது. இதைக் கற்பனை என்கிறேன். ராமாயணம், மஹாபாரதம், பாகவதம் (பார்க்கப் போனால் கிருஷ்ண சரித்ரம் பாரதத்தின் பகுதிதான்) போன்ற மஹா காவியங்களில் எது முன் நடந்தது? எது பின் நடந்தது? எது உண்மை? எது பொய்? என்று ஆராயப்புகுவதெல்லாம் வியர்த்தமான காரியம். எங்கே நியாயம்? அநியாயம்? எல்லா வற்றையும் ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொள்ளவும் சொல்லவில்லை. ஆனால் எல்லாவற்றையும் அல்லது ஒவ்வொரு பாத்திரத்தையும் சாrவிக் கூண்டில் ஏற்றிவிட முடியாது. அது சாத்யமுமில்லை. தவிர அவைகளில் விவரிக்கப்படும் அற்புதங்களின் (miracles) ப்ரமிப்பில்