பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 & லா. ச. ராமாமிர்தம்

திருவனந்தபுரத்தில் ஒரு சமயம் லக்ஷதீபம் பார்த்தேன். ஒரு அகலிலிருந்து இன்னொரு அகலுக்கு சுடர் ஏற்றி, அப்படி ஒவ்வொரு அகலாய் ஏற்றப்பட்டு பிறகு திரண்ட பேரொளி காட்சி தருகிறது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுதான் விஸ்வப்ரேமை மானுடத்தின் மிகப் பெரிய ரட்சணமாகிய பரஸ்பரம் நிர்விகல்ப சமாதி அடைந்தும் இந்த மானிட லட்சணத்திலிருந்து ராமகிருஷ்ண ரால் விடுபட முடியவில்லை என்று நினைக்கிறேன். விவேகானந்தருக்கு குருவாய் அமைந்ததோடு அல்லாமல் பக்குவநிலையை அடைந்துவிட்ட சில சீடர்களை உய்விக்க, தானே அவர்களிடம் தேடிச் சென்றார். நிஷ்களங்கமான குழந்தைத்தனத்திற்கும் கூடவே தாய்மையின் உச்ச நிலைக்கும் எடுத்துக்காட்டு வேறென்ன வேண்டும்.

எல்லாநானுமாகி எனும் தனித்தன்மை உணர்வதே சர்வப்ரக்ஞையில் ஆனந்தமாகவே இருக்கட்டும். ஆனால் அதைப் பங்கிட்டுக் கொள்வதன் மூலம் தானே அது முழுமை அடையும். இதை ஜீவாத்மாவுக்கும் பரமாத்மா வுக்கும் இடையே உள்ள உறவு எனலாம்.

பரஸ்பரம்-அதன் மந்த்ரம்

அம்மா!