பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 * 233

“குழந்தே, உன் பேர் என்ன?” “விஷ்ணுசர்மன்.” “என்ன அழகான பேர்! எத்தனை அழகாகச் சொல் கிறாய்! சரிவா, சாப்பிடப் போவோம்.”

அவள் குடிசையுள் அவனை அழைத்துச் செல்கையில், அவர் நோக்கின் கனிவில் சிரம் பக்கமாய்த் தாழ்ந்தது.

யக்ளுதேவர், ரிஷிபதவியை அடையவில்லை. ஆன்ம ஒழுக்கத்தில் பல வருடங்கள் ஆயினும் இயற்ற வேண்டிய யாகங்கள், தவங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ? ஞானமும் பக்தியும் இருந்தால் மட்டும் போதுமா, அருள் இறங்க வேண்டாமா? அலராத புஷ்பமாய் அருள்பிரஸ்ாதத் துக்கு வேளைக்குப் புவனத்தின் சுற்றல்களையும் ஜன்மாக் களையும் வைத்துக் கணிப்பதோ எதிர்பார்ப்பதோ பாபமே யாகும். அவர் அறிவார். அவனோ, அவளோ, அதுவோ, எதுவாயினும் சரி. ஸர்வாந்தர்யாமியாய அந்த சக்திக்குத் தான் வேளை அறியும். வேளையும் தவறாது.

அவர் கண்கள் சிந்தாத கண்ணிரில் பளபளத்தன. பெரிய மேட்டுவிழிகள்.

“குமாரா!” குரல் கேட்டுப் பையன் திடுக்கிட்டு நிமிர்ந்தான். மூங்கில் புதரினின்று வெளிப்பட்டு ஒரு மான் எதிரே நின்று கொண்டிருந்தது. குட்டியில்லை. ஆனால் முழு வளர்ச்சியை இன்னும் அடையவில்லை.

“ஏன் இங்கு தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருக் கிறாய்?

“என் அப்பனும் அம்மையும் என்னை விட்டுவிட்டுப் போய் விட்டார்கள்.”