பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 & 239

விலங்குக்கு இறைச்சியோ? இந்த ஆபத்கரம் கண்ணுக்குத் தெரியா இழையில் எங்கள்மேல் எப்போதுமே தொங்கிக் கொண்டிருப்பதால் எங்கள் ஸர்வ குறிக்கோளே, உயிர் இருக்கும் வரை ஒருவினாடிகூட வீணாகாமல் அதை முழுக்க அனுபவித்துவிட வேண்டும். இது தவிர வேறு அறியோம். நான் சொன்னதுக்கு ஏற்ற மாதிரி?-முன்னும் பின்னும் சூழ்ந்தும் அவசரமாய்ப் பார்த்தது. அதன் மேலுதடு தீவிரமான மோப்பத்தில் சுருங்கிற்று. “வேற்று மிருகத்தின் வாசனை தெரிகிறது. இது நல்ல வாசனை இல்லை. குமாரா இங்கேவிட்டு ஓடி விடு. இதோ நான் ஒடிப்போகிறேன்.”

சொல்லி விட்டால் ஆகிவிட்டதா? அவனுக்கு உடல் எல்லாம் உதறிற்று. கால்கள் பூமியுடன் ஒட்டிக் கொண்டு பெயர மறுத்துவிட்டன.

அப்போது அவன் அதனைக் கண்டான். இதுவரை எங்கு மறைந்திருந்தது?

நீளமும் அகலமுமாய், ஆனால் சிக்கனமான அங்கங் களுடன், இவ்வளவு பெரிய உருவை அவன் இதுவரை கண்டதில்லை.

முகம், உடல், வால் உள்பட மஞ்சளில் வரிவரிக் கோடுகள் அதற்கு அழகு செய்தன. மஞ்சள் விழிகள் அரை மங்கலில் ஜ்வலித்தன. வால் சாட்டை சுழன்றது. கிழடுதான். அதன் நடையில் அசாத்ய கம்பீரம் தெரிந்தாலும், கூடவே தளர்ச்சியும் தெரிந்தது.

மான் மின்னலாய்ப் பறந்தது. ஆபத்து கொடுக்கும் தனி பலத்தில், பிறவி ஊனம் மற்ற குறைகளெல்லாம் மறந்து விடும், மறைந்தும் விடுமோ?

ஆனால் புலிக்கு அதன் வேகத்தை அதனாலேயே அடக்க முடியவில்லை. வேகம் அதன் உச்சத்தைத் தொட்ட