பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 & 24!

“அது என்ன விதி: விதி!” பையனுக்குக் குமுறிற்று.

“ பிறப்பது, இருப்பது, முடிவது மூன்றும் இயற்கையின் ஏற்பாடு. அதற்கு விதியென்று பெயர். விதியை யாருமே தப்பமுடியாது.”

“அப்போ மான் திரும்பிவராதா?”

“வராது.”

‘ஏன், சுவாமி அதைப் பிழைப்பிக்க முடியாதா?”

“கடவுள் அதனதன் செயலுக்கும், முடிவுக்கும் விதித் திருக்கும் வேளையை மீறி எதுவும் செய்ய மாட்டார். செய்ய முடியாது. மீறினால், மற்றதன் வேளைகள் பாதிக்கப்பட்டு, யாவும் தடம் மாறி உலகுக்கே தீங்கு நேரும்.”

‘குருதேவா, புரியவில்லை.”

“இதோடார், மானின் வாழ்க்கை வீணாகவில்லை. அதன் உடல், புலியின் பசியைத் தீர்த்தது. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. அந்தந்த உயிருக்கு அதனதன் உணவு என்று விதித்திருக்கிறது.”

“நாம் உயிரைத் தின்கிறோமா?”

‘ஏன், நாம் காய், கறி, கனி, கிழங்கு தின்று வயிறு வளர்க்கவில்லையா? தாவரங்களை உண்டே! தாவரங்கள் தாம் வாழ பூமியினின்று தண்ணீரை உறிஞ்சிக் குடிக்க வில்லையா? மண்ணுக்கு இரையாகாதது எதுவுமில்லை. யாவும் கடைசியில் மண்ணோடு மண்ணாய், மண்ணிலே பிறந்து, மண்ணிலே வாழ்ந்து, மண்ணுக்கு எருவாகி, மறுபடியும் மண்ணிலே பிறந்து, சின்ன உயிருக்குப் பெரிய உயிர் என்கிற ஏற்பாடில், என்ன ஆச்சர்யம்!” அவர் கைகள் கூப்பின. மூவரும் மெளனமானார்கள். பிறகு அவன்: