பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



நான் & 245

என் ஸஹ பிறவிகளினின்று நான் வித்யாசமானவன். என் முத்திரையைப் பதித்துவிட்டுச் செல்லவே இங்கு வந்திருக்கிறேன். நான் இல்லாமல் இப்புவனத்துக்கு அதன் முழுமையில்லை, என எண்ணுவது ப்ரக்ஞையின் இயல்பு.

என் பெற்றோர்கள் எனக்காகத் தவங்கிடந்து, நோன்புகள் நோற்று, அருமையாய்ப் பிறந்தவன் நான்.

$: ※

அக்டோபர் 30, 1916இல் பெங்களூரில் பிறந்தேன். நீலம் பூரித்து, சலனமற்ற கட்டையாகத்தான் விழுந்தேனாம். என்னைத் தலைகீழாகப் பிடித்து சப்பையில் இரண்டு அறை அறைந்து ஆட்டின பின்னர்தான் குழந்தை வீறிட்டதாம். அப்படியும் கழுதைப் பாலைப் புகட்டினார்களாம். கழுதைப் பால் நெருப்பு. அத்தனை ‘சில்லில் விழுந்த குழந்தைக்குச் சுயச்சூடு வர அந்த நெருப்பு வேண்டியிருந்ததாம். வெகு நாட்கள் கழுதைப் பாலைக் குடிச்சுதாம்; அழுத மூஞ்சி சிரிச்சதாம்,’ என்று என்னைக் கேலி பண்ணி மற்ற குழந்தைகள் அழவிட்டுக் கொண்டிருக்கும்.

:k 

மதமதவென்று கொழுக்கட்டையாக வளர்ந்தேனாம். அத்தனையும் தாய்ப்பால், செக்கச் செவேலென்று அப்படி ஒரு சிவப்பு. கன்னங்களுக்கு மேல் கண்கள் பொத்தான்கள். பூனைக்கண்.

என் பழைய சிவப்பு உதிர்ந்துவிட்டது என்று சொல் கிறார்கள். ஏன் உதிராது? வயதாகவில்லை? ஆயினும் என்னைப் பற்றித் தனிப்புத்தகம் எழுதியிருக்கும் Dr. Gabrialla Eichinger Ferroluzzi, 3yg#w aTTG\060T Faircomplexioned 6TGT