பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் & 249

என் விதியின் போக்குக்கேற்றவாறு தாய்ப் பாசமாகவும், எழுத்தின் மேல் தீவிரமாய் மாறியதோ என்னவோ! எப்படி யும் அவள்தான், பரம்பரையின் நம்பகமாய், நம்பகத்தின் உருவகமாய் என் எழுத்தில் அங்கங்கு மிளிர்கிறாள்.

என் எழுத்தில் Mysticism மலிந்து கிடப்பதற்கு இந்தப் பரம்பரை வாசனைதான் காரணமாயிருக்கக்கூடும். -

※ ※

நான் இங்கு இனி, பெருந்திருவைத் தனியாய்க் குறிப்பிடப் போவதில்லை. அவள் என்றுதான் அழைக்கப் போகிறேன். நிம்மதி. அவள் எனில் அம்பாளின் எல்லா ஸ்வரூபங்களுமாவாள். புவனத்தின் ஸகல ஜீவராசிகளை யும் ஆளும் தாய்மைக்கு மறுசொல் ஆவாள். சர்ச்சைகள், சந்தேகங்களுக்கு இடமற்ற அர்ச்சனை புஷ்பம், கூடவே அர்ச்சிக்கும் சன்னிதானமும் அவள்தான். என் எழுத்தின் ரகஸ்யமும் இதுதான். வெளிச்சமும் இதுதான்.

அவள்.

:: 

தாத்தா தன் பதினாலு வயதிலிருந்தே பொடி போடுவார். தாத்தா வரித்தகழிபோல் நெட்டையாய், நிமிர்ந்து, ஜ்வாலைச் சிவப்பில் இருப்பார். தாத்தாவுக்குத் தன் பதினைந்து ரூபாய் சம்பளத் தில் பெரிய கூட்டு சம்சாரத்தில் சின்ன வீடு உண்டு. ‘தக்னூண்டு சாமிக்குத் துக்குனுண்டு நாமம். தாத்தா இரவு பாலுஞ்சாதம் சாப்பிடுவார்.