பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ❖ லா. ச. ராமாமிர்தம்

கொண்ட உருவ எல்லையைச் சற்று நேரம் சிந்தித்துப்
பார்த்துவிட்டு ஏதோ திருப்தியில் பெருமூச்செறிந்தான்.

அவன் காரியத்தில் முனைந்துவிட இனி அவனைக்
கலைக்க முடியாதென்பது தெரிந்துவிட்ட மருமகள் ஒடி
வந்து அவன் காலில் விழுந்தாள். அவள் குரலில் அழுகை
வந்தது.

“மாமா மாமா நீங்கள் எங்களுக்கு வேணும் மாமா.
என் வவுத்துலே மூணு மாசமா வளந்துட்டிருக்கிற பூச்சிக்கு
பாட்டா வேணும். அது மேலே இரக்கம் பாருங்க. வீட்டுக்குப்
பெரியவங்க உங்களைத் தோத்துட்டு நாங்க எப்படி
இருப்போம்?”

வவுத்துல பூச்சியா? முதலில் புரியாமல் கிழவன்
பின்னடைந்து, அடுத்து புரிவு உள்விடிந்ததும் அவன் நெற்றி
அதன் பிரகாசத்தில் உயர்ந்து விசாலித்தது.

“அடிமவளே!” மருமகளை ஆதரவுடன் தூக்கிவிட்டான்.
“அப்படியா சமாச்சாரம்? ஒரு நல்ல காரியம் துவக்குமுன்
னால் நீ சொன்ன சேதியைவிட நல்ல ஜகுனம் வேண்டாம்.
என் ராஜாத்தி தெய்வம்தான். இப்படித்தான் நடக்கப்
போவுதுன்னு முன்னாலேயே தெரிஞ்சுகிட்டு, இந்த வீட்டை
விட்டு போவக்கூடாதுன்னுட்டு உன் வவுத்துல பூந்துட்
டாளா? கிட்ட வா. உன் வவுத்தைத் தொட்டு பாக்குறேன்.
எனக்கு அப்புறம் நேரம் இருக்காது. ஆமா. நிச்சயமா அவளே
தான். உனக்கு ராசாத்தித்தான் பிறக்கப் போவுறா.
அதனாலேதான் இந்தக் கிணத்தைத் தோண்டியாவணும்.
நான்தான் தோண்டனும். சேதி நிச்சயமாயுட்டுது. சரி நீங்க
ரெண்டு பேரும் போங்க. வூட்டுலே எவ்வளவோ வேலை
காத்துக்கிடக்கும் ராஜாத்தி வேலையும் சேர்த்து. இனிமே நீ
சொன்னா, யார் சொன்னாலும் கேக்க மாட்டேன். இனி
நான் வேறே கிணறு வேறே இல்லை.”