பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 8

நான் & 25;

அதே சமயத்தில் பெருந்திரு மேல் அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை. இந்த சத்துக்களும் சேர்ந்துதான் ராமாம்ருத ஸாரம், லா.ச.ராவின் தேடல் தத்துவம்’.

: 

ஒரு ஆதாரத்துக்கு இருபது வயது என்று வகுத்துக் கொண்டேனே தவிர, என் பதினாறு, பதினேழு வயதிலேயே எழுதத் தொடங்கி விட்டேன். இங்கிலீஷில் தான் ஆரம்பம். விளையாட்டாய் என் நண்பனும், நானும் ஆளுக்கு ஒரு கதை எழுதுவதென ஆரம்பித்து நான் என்னுடையதை முதலில் முடித்து நோட்புக்கை தூக்கியெறிந்து மறந்தும் போய்விட்டேன். ஆனால் அவன் அதை எடுத்துக் கொண்டு போய் Short Story என்கிற ஆங்கிலப் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்த மஞ்சேரி எஸ். ஈஸ்வரனிடம் கொடுத்து விட்டான். அவன் மூலம் அவர் என்னை வரவழைத்து, “கதை நன்றாக இருக்கிறது. என் பத்திரிகையில் வெளி யிடப் போகிறேன். சன்மானம் எதிர்பார்க்காதே. கொஞ்சம் டாகுர் ஜாடை அடிக்கிறது. நல்ல நடை” ஒரு பதினேழு வயது பையனுக்கு முதல்கதையே-வெளிவருகிறதுஅதுவும் அத்தனைப் பாராட்டுடன்-என்றால் வேறென்ன வேண்டும்?

ஆனால் இங்கிலீஷில் மார்க்கெட் இல்லை. Short Storyயும் நின்றுவிட்டது. தமிழுக்குத் தாவும் அவசியம் ஏற்பட்டுவிட்டது.

அங்கும் முதல் கதையே அப்போது செத்துப் பிழைத்துக் கொண்டிருந்த மணிக்கொடியில் வந்தது. என் மூன்றாவது கதையுடன் மணிக்கொடியும் மூடிக் கொண்டது. ஆனால் என் கதைப்பாணி, அதன் நடை எல்லாம் சேர்ந்து தமிழ்ச்