பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் & 253

எப்படியோ பதினெட்டு இருபது வயதில் ஒரு இடத்தில் தொற்றிக் கொண்டு, பிறகு இடங்கள் மாறி 1941இல் வங்கி யில் நிலைத்து 1976இல் பஞ்சாப் நேஷனல் வங்கி தென்காசி கிளை மானேஜராக ஒய்வு பெற்று, என் உத்யோகப் பருவத் தைப் படிப்பதற்கேனும், சுருக்க முடித்துக் கொள்கிறேன். ஆனால், உத்யோகமில்லாமல், என் எழுத்தை மட்டும் நம்பி யிருந்தேனெனில் என் மேல் புல் முளைத்திருக்கும். என் நாளில் அப்படி எழுத்தின் மேல் ஆசையால் அதற்கே பலி யானவர் உண்டு. எழுத்தின் இந்த மறுபக்கத்தை விஸ்தரித் துக் கொண்டே போக எனக்கு விருப்பமில்லை. பார்த்ததே போதும்.

இப்போது நிலைமை எவ்வளவோ மேல். ஆனால் அதையும் விவரிக்கப் போவதில்லை. நான் உண்டு, குடும்பத் துக்கு என் கடமை என் உத்யோகம். என் தவத்துக்கு என் எழுத்து உண்டு என்று எனக்கு வாய்த்ததிற்கு நான் எவ்வளவோ புண்ணியம் செய்தவன்.

ஆனால் வாசக கவனம் என் மேல் பதிவதற்கு எழுத்துடன் பலநாட்கள் உழன்றேன். விமர்சகர்களின் பார்வை என் மேல் எப்பவும் ப்ரியமாயிருந்தது என்று சொல்வதற்கில்லை. “ராமாமிருதமா? அவருக்கு வக்கிரப் பார்வைன்னா! எதையும் வாசல்வழியாகப் பார்க்க மாட்டாரே! ஜலதாரை வழியாகத்தான் அவருக்குப் பார்க்கத் தெரியும்!”

“அவர் என்ன ஒரே கதையைத் தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்!”

“ஆமாம் எழுதுவது என்ன புரிகிறது! தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் வருகிறது!”

“ஏண்டா, குழந்தையையோ உயிரோடு படைத்து