பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 : லா. க. ராமாமிர்தம்

நட்சத்ரத்துக்கும் துறந்து விட்டிருக்கு. அது ஒரு மகாத்மிய

என்ன வேடிக்கைன்னா அவளுக்கு எதிரே மதிலுக்கு வெளியே பிரம்மாண்டமா ரெண்டு ராக்ஷஸ் சிலைங்கஒன்று ஆண், மத்தது பெண். கையில் நெட்டுக்குத்தா கத்தியோட குந்திட்டிருக்குதுங்க. அதுங்க பின்னாலே அதுங்க சைஸ்-க்கு ஏத்த மாதிரி குதிரைங்க சந்தளி அம்மனுக்கு வேலைக்காரங்களாம்.

நடுப்பகல்லே அங்கே யாரும் போவ மாட்டாங்களாம். அடிச்சுப் போட்டுடுமாம். ஒத்தன் ரத்தம் கக்கிச் செத்துக் கிடந்தானாம். பூசாரி கூட அவன் பூசையை அவசரமா முடிச்சுகிட்டு வந்துடுவானாம்.

※ ::

இந்த மாதிரி நினைவுகள், கற்பனைகள், நம்பிக்கைகள், வயதின் ஒவ்வொரு கட்டத்துக்கும், சோதனைகளுக்கும், சம்பவங்களுக்கும் ஏற்றவாறு அவைகளால் மாற்றி யமைக்கப்பட்ட தெளிவுகள், புதுக்குழப்பங்கள், இன்னும் நான் சொல்ல விட்டவை எல்லாம் சேர்ந்து பிசையலில் உருவானதுதான் லா.ச.ராவின் தமிழ்-ஏன் லா.ச.ராவின் தன்மையே-லா.ச.ராவே.

இவைகளினூடே எங்கள் பெருந்திருப் பாட்டியின் எல்லையற்ற பொறுமையும் கருணையும் எங்களைக் காக்கின்றன. அந்தப் பரம்பரை எண்ணத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நம்பிக்கைக்கு என்ன பெயர் கொடுத்தால் என்ன? முதலில் நம்பிக்கை என்பது எது என்று திட்டவட்டமாக விரிக்க முடிகிறதோ? ஆனால் அது இல்லாமல் வாழ முடிகிறதோ?