பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 : லா. ச. ராமாமிர்தம்

கையில் கோவில் மணியை ஆட்டிக்கொண்டு மாங்கல்ய தாரண மந்திரத்தைச் சொல்கிறார். சொல்லி வைத் ற் போல் நகார், ஆலயமணி, மேளம், ஜாலர் எல்லாம் சேந்து முழங்குகின்றன. குருக்களின் சூழ்ச்சியாகவே இருக்கலாம்அல்லது சிவன் கோவிலில் தற்செயலாய் பஞ்சமுக தீபாராதனையாகவும் இருக்கலாம்) உடல் சிலிர்க்கிறது.

ஹைமவதி கொசுவம் வைத்துக் கட்டிக்கொண்டு நறுக் கென்று திகழ்கிறாள். அவள் ஒன்றும் தலைகுனியவில்லை. முகம் ஒன்றும் சிரிப்பில் இல்லை. என்ன புதுமணப் பெண்ணா? அதெல்லாம் இந்த சமயத்துக்குப் பாந்தமாயு மிருக்காது. கண்கள் மட்டும் சற்றுத் தாழ்ந்திருக்கின்றன. ஐம்பத்து ஐந்து வருடங்களின் மணவாழ்க்கையில் அவள் வெற்றியின் ஸான்னியத்தில் ப்ரகாசிக்கிறாள்.

எங்கள் பெண் காயத்ரி, தாலியின் மூன்றாம் முடிச்சைநாத்தனார் முடிச்சைப் போடுகிறாள்.

அந்த சமயத்தில், அம்பாள். அவளுடைய மர்மப் புன்னகை மாறாமல் இந்த வைபவத்தைப் பார்க்க, ப்ரபை யிலிருந்து இரண்டு அடி முன் நடந்து விட்டாற்போல்

அந்த அரையிருளில் வெளிச்சமாகிறாள். இதெல்லாம் ப்ரமைதான், பகல் வெளிச்சத்தின் ‘ஜாலக்'தான். அப்பவே தெரியல்வியா? ஆனால் சமயத்தின் ரஸவாதமும் கலந்து தானே இருக்கிறது!

காலம், வயது எல்லாம் பொய். வாழ்க்கையில் சமயங்கள் தாம் உண்டு. அவைகளில் தான் வாழ்கிறோம். அவைகளுக்காகத்தான் வாழ்கிறோம்.

என் வாழ்க்கையின் பவனியை இந்தக் கட்டத்திலேயே நிறுத்திக் கொள்ளட்டுமா?

  • ※ *