பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ❖ லா. ச. ராமாமிர்தம்

ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஐயா
கிணறு வெட்டி ஒயறத்துக்குள்ளே அவருக்கு உள்ளேயே
வழி தப்பிப் போயிடப் போறாரு. கிணறு வெட்டற நேரம்,
வயசைப் பாரு! வேறு சமயமாயிருந்தால் அவர்களுடைய
ஏளனச் சிரிப்புக்கும் கைகலப்பு நேர்ந்திருக்கும். இப்போ
வாயடைச்சுப்போய், காதடைச்சுப்போய், காரியம், நம்
உண்மையான காரியத்தைக் கவனிக்க வேண்டியதைத் தவிர
நான் வேறேதும் கவனிக்கக் கூடாது.

அவ்வப்போது மனத்தைத் திடம் பண்ணிக்கொண்டு
காரியத்தில் முனைந்தான்.

ஏ புள்ளே, எனக்கு நெனைப்பு தெரிஞ்சு உன்னை
மொத்தினதைத் தவிர வேற மொத்தமா எனக்கு கியாபகம்
இல்லை. நம்ம உறவே இப்படித்தான் வளர்ந்திருக்கோன்னு
எனக்குக் குழப்பம். அப்போல்லாம் இல்லாத ரோஷம்
உனக்கு இப்போ செத்துப்போம்படி என்னடி வந்தது? ஒரு
தடவை உன்னை அடிச்சதுக்கு உன் புள்ளே என்னைக்
கண்டிக்க வந்தபோது, நீ அவனோடு சண்டைக்குப்
போயிட்டே. “என் புருசன் என்னை அடிக்கிறான். அதைக்
கேட்க நீ யாருன்னு”. நான் செய்தது தப்பு. எனக்குத்
தெரியுது. உனக்குத் தெரியல்லையா?

அப்படியில்லை மச்சான்-நீ அடிக்காட்டி உனக்கு என்
மேல இருக்கற அக்கறையின் ஆத்திரம் எப்படி விளங்கறது?
எங்களை அப்பப்போ அடிக்க வேண்டியதுதான். நீ என்ன
குடிச்சுட்டு வந்து அடிக்கற புருசனா? உனக்குக் குடி, பீடி,
கூத்தி இந்தப் பழக்கமெல்லாம் கிடையாதே. இல்லாதவரை
நீ அடிக்கறத்துல என்ன தப்பு. எனக்கும் அப்போ தாங்கிக்கற
வயசுதானே? ஒங்க நியாயமெல்லாம் ஒரே மாதிரி இருக்கற
தில்லே. அதனால நுகத்தடி சரியாப் பிடிக்க முடியல்லே.

பின்னோக்கில் அவனுக்குச் சற்று வியப்பாகவே