பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ❖ லா. ச. ராமாமிர்தம்

பிடிச்சுத்தான் வரேன். ஆனால் இதுமாதிரி ஒரு திட்டம்
பார்க்கல்லே. பரதேசி என்னவோ தெரிஞ்சு வெச்சுக்கிட்டுத்
தான் இங்கே தோண்டச் சொல்லியிருக்கான். ஆனால்
கல்லையும் மண்ணையும் மூங்கில் தட்டுல வாரியாந்து
மேலே வந்து கொட்டறதுதான் கஸ்டமாயிருக்குது. ஆழம்
கூடக் கூட கஸ்டமும் கூடுது. மேலே ஒரு ஆளை வெச்சு,
தட்டை கவுத்துலே கட்டி வெச்சு மேலே அனுப்பலாமுன்னு
பாத்தா அது அப்பிடி செஞ்சா தப்பு நேர்ந்துடுமோன்னு
பயம்மாயிருக்குதே! எல்லாமே உன் கையாலேதான்
ஆவணும்னு பரதேசி திட்டம் போட்டுட்டானே. அவன்
கிட்டே போய் சலுகை கேட்க ரோசமாயிருக்குது. அத்தோட
அந்த ஆளுக்கு திட்டம் சொல்லத்தான் அதிகாரம், மாத்த
அதிகாரம் கிடையாதுன்னு தோணுது. அவனே அவனுக்கு
வந்த உத்தரவைத்தான் எனக்குத் தெரியப்படுத்தறான். அடி
ராசாத்தி நீ பண்ற கூத்தைப் பாத்தியா?

நான் பண்ணற கூத்தா? நீ பண்ணிக்கிட்ட கூத்துன்னு
திருத்திக்கோ. உன்னாலே முடியலைன்னா இப்படியே
நின்னுக்கோ. உன்னை யாரு கையைப் பிடிக்கறாங்க

ஆ. ஆரம்பிச்சுட்டையா? உன் சோளப்பட்டாணி
குதிப்புக்கு. மகளே உன்னைக் கையால் பிடிக்க முடிஞ்சா
உன்னை-உன்னை-

அவன் உள்ளே அவள் சிரிப்புக் கேட்டது.

கொஞ்ச நாளாகவே தன்னுள் ஏதோ மாறுதல் நடந்து
கொண்டிருப்பதாகவே அவனுக்கு தோன்றிற்று. இல்லை
தெரிந்தது. பல் விளக்குவது, குளிப்பது, துணி மாத்துவது
போன்ற கடன்களில் அக்கறையில்லை. ஆமாம் எந்த
விவசாயி காலை நேரத்துல பல் விளக்குறான். தோப்புக்கு
போறப்ப பல்லுலே வேப்பங்குச்சியை மாட்டிக்கிட்டா