பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ராசாத்தி கிணறு ❖ 21

அப்புறம் கழனிக்கட்டிலிருந்து வீடு திரும்பி காலைப்
பழயதுக்கு முன்னாலே கால் அலம்பறப்போ துப்பறதோடு
சரி.

பல் விளக்கறது கிடக்கட்டும். அவனுக்கு வயிற்றுப்
பசிமேல் அக்கறையில்லை. வயிற்றுப்பசி தெரியவில்லை.
ஆனால் அதனால் உடம்பில் களைப்போ பலகீனமோ
இல்லை. தூக்கம் இல்லை. சோறு இல்லை. என்ன இது
வியப்பாயிருக்குதே. குளிக்கல்லே. ஆனால் உடலில் நாற்ற
மில்லை. எப்போ இதெல்லாமில்லையோ வூட்டுக்குப்போய்
படுத்திட்டிருக்க என்ன தேவை?

அவன் வெளியிட்டுவிட்ட நிலைமையை அனுசரிப்பது
போல், அன்றிலிருந்து கல்லோ மண்ணோ அதிகம் உதிர்வ
தில்லை. ஆழமும் வேகமாக ஏற்படவில்லை. அதைப்பத்தி
எனக்கென்ன? தோண்டிக்கிட்டேயிருக்க வேண்டியதுதான்.
தேய்ச்ச பித்தளை தேவுசா போல, கிணற்றின் உள்சுவர்
அடியிலிருந்து அண்ணாந்து பார்க்கையில், சுரண்டியெடுத்
தாப்பிலே அத்தனை சுத்தமான ப்ரமை தட்டிற்று. இத்தனை
சுத்தமாத் தோண்ட முடியுமா? கண்ணைக் கசக்கிக் கொண்
டான். இனி தோண்டறதுக்கு ஆழம் இல்லியோ என்னவோ?
இங்கிருந்து பார்த்தா அம்பது அடிக்குக் குறையாதுன்னு
தோணுதே! கவுறு உள்ளேவிட்டுத்தான் நான் வெளியில்
வரமுடியும் போலத் தோணுதே!

கேள்வி தோன்றிற்றே ஒழிய கவலை தோன்றவில்லை.

நேரம் போனது தெரியாமல் எத்தினி நேரமிருந்தானோ?

நக்ஷத்ர வேடு கலைஞ்சு சத்தே இருண்ட மாதிரியில்லே?

சற்றுக் கறுக்கல் கண்டதே காட்டி உடனே தெளிஞ்சு
போச்சு. வித்தை காட்டறியா? காட்டு, காட்டு எனக்கென்ன
வந்தது! இவ்ளோ ஆழம் தோண்டினதே அன்னி, கல்லில்