பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ராசாத்தி கிணறு ❖ 23


கிணத்துலே தண்ணி பொங்குது. அக்கம் பக்கத்துலே
நிமிஷமா பத்திக்கிச்சி. கிணத்தைச் சுத்தி ஒரே கும்பல்.
கொல்! கீழே சரிஞ்ச தண்ணியை அள்ளிக் குடிச்சுட்டு;
“அடே தேனுடோய். இதுமாதிரி எங்கனாச்சும் கிடைக்குமா?
நொம்ப புண்ணியம், நொம்ப புண்ணியம்!!” தண்ணியும்
குடிக்கறவங்களுக்கு வஞ்சனையில்லாமல் வழிவிடுது.

அப்போது பார்த்தவங்க பின்னாலே சொன்னாங்க.
அப்பிடி சொல்றவங்க எப்பிடியும் ஒவ்வொருத்தர் ஒவ்
வொரு மாதிரியாத்தானிருக்கும்.
பாக்கற கோணம்.

தனி வட்டத்துலே பருந்தாட்டம், றெக்கையாட்டம
ரெண்டு கையையும் விரிச்சிக்கிட்டு காத்துலே நீஞ்சி வந்து,
நேரே கிணத்துள்ளே விழுந்தான் பாரு, குஹையிலிருந்தே
நேரே வந்தானா, இல்லே நடுவுலே பாறையிலே ரெண்டா
வது ‘தம்’ பிடிச்சானா. எப்படியிருந்தாலும் சரி, வெறும்
பழக்கத்தாலே அந்த மாதிரி கிணத்துலே நேரே ‘டைவ்’
அடிக்க முடியாது. வேறு சித்தியெல்லாம் தெரிஞ்சு வெச்சிட்
டிருக்கணும்.

பாத்தவங்க பின்னாலே சொன்னாங்க. கிழவனைக்
காப்பாத்தத்தான, மீன் கொத்தியாட்டம் பறந்து கிணத்துக்
குள் பாய்ஞ்சிருக்கதா நெனச்சோம். ஆனால் அப்படியில்லே.
நேரே கிழவன் கைச்சிலையைப் பிடுங்கத்தான் முயற்சி
செய்தான். ஆனால் கிழவன் பிடி சாவுப்பிடியாச்சே,
விட்டுடுமா? அதுக்குள்ளே ஒரு அலை கிளம்பி சுவராட்டம்br>< அவங்க ரெண்டு பேர் மேலேயும் இடிஞ்சி விழுந்து, தன்
சுழியிலே ரெண்டு பேரையும் உள்ளே இழுத்துக்கிட்டுப
போயிட்டுது.

கிணத்தைச் சுத்தித் தேர்த்திருவிழாவாட்டம் கும்பலும்
கூப்பாடும் தெரியுது. தண்ணி கிணறும் கோவம் தணியாமே
சீறிக்கிட்டு இருக்கறத்துலேயே, உள்ளே மாட்டிண்டிருக்கற