பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ராசாத்தி கிணறு ❖ 25


சமயத்துக்கு அவன் வருவானேன்? பரதேசி சாதா ஆள்
இல்லை

ரெண்டு பேரையும் ஒரே பள்ளத்தில்தான் புதைச்சாங்க.
எரிக்கறதுதான் பழக்கம்னாலும் இவங்களை சாமியார்லே
சேர்த்துட்டாங்க போல! மக்களுக்கு மனம் எந்த சமயம்
எப்படித் தோணுதுன்னு காண முடியாது!

தண்டல் பண்ணி கட்டடம் கூட எழுப்பிட்டாங்க.
சமாதி மேலே கோவில். கோவில்லே ஒரு வயசான
பெண்பிள்ளை சிலை நினைப்பிலே அமைச்சிருக்காங்க.
ராசாத்தி அடையாளமேயில்லை. எல்லாம் நெனைப்புத்
தானே!

சின்ன ராசாத்தியை இடுப்பில் தூக்கிட்டு, மருமகள்
மாலைமாலை விளக்கேத்த எண்ணெயுடன் கோயிலுக்கு
வரும். அந்த முதல் பெண் குழந்தைக்கப்புறம், இன்
னொரு குட்டி ராசாத்தி, அப்புறம் ரெண்டு ஆம்புளப்
பசங்க-குடும்பத்துக்கு எந்தக் குறையுமில்லை. எப்படி
வரும்? ஊருக்கே கிணறு வெட்டிக் கொடுத்தவங்
களாச்சே! ராசாத்தி, உன் குடும்பம் என்னிக்கும் நல்லா
யிருக்கணும்.

முதல்லே ஒரு வாரம், பத்து நாளைக்குக் கிணத்தண்டை
யாரும் போவல்லே. ஆவிங்க சுத்துமோன்னு பயம்.
ஆனால் எத்தினி நாள் முடியும்? தண்ணி தேவைப்படுதே. கிணறு
புழக்கத்துக்கு வர ஆரம்பிச்சாச்சு. ராட்டினம் போட்டாச்சு.
எடுக்க எடுக்க அமிர்தம், ஊத்தினுள் கூடுது.

ஆமாம், எல்லாம் சரிதான், அந்த சிலை என்ன
வாச்சு?

கேள்வி நல்ல கேள்விதான். ஆனால் அதுக்குப் பதில்
இல்லை.