பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உறவு ❖ 31


உயரக் கிளையில், இரு சிட்டுக் குருவிகள் கொஞ்சிக்
‘கிறீச்’சிட்டு உடனே பறந்து ஒன்றையொன்று துரத்திக்
கொண்டு சென்றன.

“ஐயா, மார் நோவுதுங்களா?” அவர் நெற்றி நடுவில்
பச்சை நரம்பு மின்னல் புடைக்கக் கண்டாள்.

“தெரியல்லே. நாக்கை வரட்டுது.”

“சுத்துமுத்து வீடு காணோமே!” சுற்றுமுற்றும் பார்த்
தாள். “தோப்புத்தான் தெரியுது”

“எனக்கு இந்த இடம் தெரியும். இந்தத் தோப்புத்
தாண்டி வாய்க்கால் ஒடுது.”

“நல்ல தண்ணியா இருக்குமா?”

“இருக்கிறவரைக்கும்தான்.”

“என் கையில் ஏனம் ஏதுமில்லையே!” தெரிந்தும்
அந்தக் கவலையில் தன் கைப்பையைக் குடைந்தாள்.

“பரவாயில்லே. இரண்டு கையிலும் ஏந்திண்டு வா.”

“வரவரைக்கும் என்ன நிக்கும்?”

“நின்னவரைக்கும்தான். உதட்டில் ஈரம் பட்டால் சரி.”

அவள் எழுந்து ஒடோடிப் போய்க் கொண்டு வந்து
அவர் வாயில் ஊற்றுகையில், பரவாயில்லே, ஒரு முழுங்கே
கிடைத்தது. அவர் வாயுள் அவள் கைத்தண்ணீரை
ஊட்டுகையில், அவள் வாயும் மொக்கு திறந்து கொண்டது.

“அம்மாடி! நீ நல்லாயிருக்கணும். நல்லாயிருப்பே.
கடைசி மூச்சுப் பேச்சு எப்பவும் பலிக்கும். உன் பேர்-
இல்லை வேண்டாம். இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.
உனக்கு ஊதாக் கலர் பொருத்தமாயிருக்கு.”

தன்னை இறங்கப் பார்த்துக் கொண்டாள். தலைப்பை