பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அலைகள் ஒய்வதில்லை ❖ 39


மீளறதைப் பார்த்துண்டேயிருக்கலாம். என்ன கோபம்!
அத்தனையும் வியர்த்தம். ஏனால் அந்த ஓயாத கோபம்?
இப்படித்தானே ஸேதுராமன் பாதங்களை எத்தனை முறை
கழுவியிருக்கும்!

“ஒ, பக்தி பண்ண சமுத்ரம் போனாயாக்கும்!”

“அப்படியில்லை. ஆனால் இல்லேன்னும் சொல்ல
முடியாது. ஒண்ணைத் தொட்டுத்தான் ஒண்ணு. அதில் பக்தி
இருந்தாலும் தப்பில்லே.”

“ராமன் காலத்திலிருந்துதானா? அவனுக்கு முன்னா
லும் மனுஷாள் இல்லையா?”

“வாஸ்தவம் தான். பல்லாயிர வருஷக் கணக்கில்
எத்தனை பாதங்களைக் கழுவியிருக்கும்.”

“வாரித் தன்னோடு இழுத்துண்டும் போயிருக்கும்.”

“என் வாயிலிருந்து வார்த்தைகளைப் பிடுங்கற மாதிரிப்
பேசறேளே! ஆச்சரியமாயிருக்கு.”

“என் இளமையில் அலைகளில் குளிச்சிருக்கேன்.
காலை ஒன்பது மணிக்கே வந்துடுவேன். இதுகளுக்கு ஒரு
தனி ஆகர்ஷணம் உண்டு. அலைகளில் குட்டிக்கரணம்
போடுவேன் சுகமாயிருக்கும். உடம்புக்கு ஒத்தடம் கொடுத்த
மாதிரி இதமாயிருக்கும். அப்புறம் ஒரு சமயம் குட்டிக்கரணம்
போட்டுக் கீழே காலிறங்குகையில் பாதம் மணலில் பதிய
வில்லை. பயந்து போனேன். அப்படியே இழுத்துண்டு
போயிட்டால்? அன்றிலிருந்து அலைகள் பக்கம் போவ
தில்லை. அம்மாவுக்கு மிஞ்சினேன். ஏற்கெனவே அவள்
நிறையப் பறிகொடுத்தவள்.”

“எனக்கும்தான் மிஞ்சினேள். நம் கலியாணம் நடக்கு
முன்னாலேயே-”