பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அலைகள் ஒய்வதில்லை ❖ 43


“அப்பா எனக்கு இப்போ ஒண்ணு தோணித்து.”

“சொல்லு.”

“இந்த சமயத்துக்கு மெளனம் தான் பாஷை. ஆனால்
தோணினதைச் சொல்லித்தான் ஆகணும். தோணிடுத்து.
இதுவே மெளனத்திலிருந்து தோணினதுதானேப்பா!”

“Beautiful. சொல்லு.”

“அப்பா! அப்பா அம்மா நீங்க ரெண்டு பேர். நான்,
சேகர், கண்ணன், ஸ்ரீகாந்து நாங்கள் நாலு பேர். நாம்
சேர்ந்து எப்பவுமே ஒண்ணு.”

“ஒண்ணாத்தானேயிருக்கோம்! ஏன், மூத்தவனை
மறந்துட்டியா?”

“மறக்கல்லே. ஆனால் நான், நம்மோடு அவளை
சேர்க்கல்லே.”

“.....?”

“அவன் தனியாப் போயிட்டான். அவனுக்குக் கலியாண
மான ஒரு வாரத்துள் நீங்களே அவனைத் தனிக்குடித்தனம்
வெச்சுட்டேளே!”

“அதுதான் அவனை நீ சேர்த்துக் கொள்ளாத
காரணமா?” அவர் புன்னகையில் கேலி அரும்பிற்று.

“இல்லை அவன் நம் இனத்தில் சேர்ந்தவன் இல்லை.
நல்லவன்தான். ஆனால் நம்மோடு ஒட்டாமல் எப்பவுமே
தன் சுபாவத்தில், தன் காரணம், தன் வழின்னு வாழறான்.”

“அது தப்பா? யாருமே அப்படித்தானே!”

“அது சரிதான். அவனுக்கு எங்களைப் பிடிக்கும்.
எங்களுக்கும் அவனைப் பிடிக்கும். பேச்சில், செயலில்
correct. வாக்குத் தவறாதவன்னு பேர் வேறே வாங்கிட்டான்.