பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ❖ லா. ச. ராமாமிர்தம்

“போன வருஷம் இதே அலைகளுக்குத்தான் என்
பிள்ளையைப் பறிகொடுத்தேன்.”

தூக்கிவாரிப் போட்டது.

“கரையில் உட்கார்ந்திருந்தேன். அலையில் போய்
நின்னுட்டு வரேன்னான். என்னையும் எனக்குக் கைப்
புத்தகத்தில் ஸ்வராஸ்யம் போகல்லே. அவன் போனான்.
எனக்குப் புத்தகத்தில் கவனம். திடீர்னு ‘அம்மா’ன்னு ஒரு
அலறல். நிமிர்ந்தால், அலையோடு போயிண்டிருந்தான்.
அந்த அலறலும் சேர்ந்து, உடல் பூரா வெலவெலத்துப்
போயிட்டேன். வாயடைச்சுப் போச்சு. இது ஆள் நடமாட்டம்
தள்ளிப் போன இடம் ஒத்தரும் கண்ணிலும் படல்லே.
அவ்வளவுதான். போயே போயிட்டான். பிணம்கூடக்
கிடைக்கல்லே.

என்னென்னவோ கேக்கணும், ஏதேனும் ஆறுதல்
சொல்லணும்னு தோணித்து. ஆனால் குரல் தோத்துடுத்தே!

என் கேளாத கேள்விக்குப் பதில் சொல்வதுபோல்.

பையன் பதினாலு வயஸுக்கு வாட்ட சாட்டமா கட்டு
மஸ்தாயிருப்பான். நல்ல வளர்த்தி. நான் பெத்திருந்தால்கூட
எனக்கு அப்படிக் கிடைக்கமாட்டான். ‘அம்மா. அம்மா'ன்னு
அப்படி உசிரை விடுவான்.”

‘என்ன சொல்றா?’ குழம்பிப் போனேன்.

“நான் இரண்டாந்தாரம். என் மூத்தாள், அஞ்சு வருஷத்
துக்கு முன்னால் gas ஸ்டோவ் வெடிச்சுப் போயிட்டா.
மாமா சீக்காளி. என்னைவிட ரொம்பப் பெரியவர். தன்
உடம்பையும் பையனையும் சேர்த்து அவரால் பார்த்துக்க
முடியல்லே. என் வீட்டிலும் வழியில்லை. அங்கேயும் அப்படி
ஒண்ணும் வளமில்லை. ஆனால் விதின்னு ஒண்ணு இருக்கே
மாமி, எப்படி சேர்க்கறது பாருங்கோ! இல்லாட்டா எனக்கு