பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ❖ லா. ச. ராமாமிர்தம்

ஒண்டிக் கட்டைப் பொம்மனாட்டியே அது சின்னவளோ,
பெரியவளோ, என்னிக்குமே தனக்கு ஆபத்துத்தான். நான்
பெரிய தப்புப் பண்ணிட்டேன்.”

இருவரும் அப்பறம் பேசவில்லை.

மேலே, நக்ஷத்ர மயானக் கொள்ளையிலிருந்து ஒரு
நக்ஷத்ரம் திடீரெனத் தனிப்பிதுக்கிறது. என்னைப் பார்!
இருவர் கவனத்தையும் பற்றி இழுத்தது. பெரிய கற்கண்டுக்
கட்டி. இல்லை, ஸ்படிகம். நான் இவ்வளவு பெரிசு ஆனால்
நான் அநாமி. என் ஸ்படிகம் என் தனிக் கண்ணீர். எனக்காக
இரங்குவோர் யார் இருக்கா?

அவர் குரல் அந்த அமைதியின் மந்தரத்தில் கண
கணத்துக் கொண்டு வந்தது.

மஹா சோகம் மஹா யாகம்.
அதில் ஆத்மா தன்னையே ஆஹூதியாகச்
சொரிந்து கொள்கிறது.,br> ஆத்மாவுக்கு அழிவில்லை.
யாகத்துக்கும் முடிவில்லை.
பூவரசிலிருந்து ஒரு இலை உதிர்ந்தது.
“எல்லாம் சரி. இத்தனை வேதனைப்பட்டு அவலம்
கெட்டு, சீர் அழிஞ்சாவது வெளியே போய் திரும்பி
வரணுமா? என்பதற்கு காரணம் தெரியலையே!”

“காரணம் இருக்கிறது.” அவள் த்வனி அவருக்குச் சற்று
ஆச்சர்யமாயிருந்தது. அது தேவையில்லை.

“ஆம். நான் சொல்லப் போகிறேன். நிச்சயமாய்
சொல்லித்தான் ஆகவேண்டும். இத்தனை நேரம் கழித்து
வந்து சொல்லாமல் முடியாது.”

அவருக்கு லேசாகக் கோபம் படர்ந்தது.