பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஸ்ருதி பேதம் ❖ 55


“அதான் நெனச்சேன். இன்னும் உங்களுக்கு விடியல்
லியா? வெயில் முதுகைப் பிளக்குது!”

“குழந்தைக்கு ஜூரம். ராமுழிச்சு, விடிகாலையிலே
அசந்துட்டேன்.”

கிழிந்த பாயில் படுத்திருக்கும் பையனைப் பார்த்தான்.
மூணு வயது? அயர்வில் அரைக் கண்ணில் காங்கை
அடித்தது.

சுற்றுமுற்றும்-

ஒரே அறை. அதுவே கூடம், கிச்சன், படுக்கை, மூலை
யில் ஜலதாரை. சுவருக்குச் சுவர் ஒரு கயிற்றுக் கொடியில்,
இரண்டு புடவைகள். ஒரு அழுக்கு லுங்கி, குழந்தை நிஜார்.
சொக்காய்கள் இரண்டு தொங்கின. எற்கனவே அழுக்கும்
மழை ஒழுகல் கறைகளும் வழிந்து காய்ந்த சுவர்களில்
கரித்துண்டால் கிறுக்கல்கள்.

அப்பா மேல் ஆச்சி

அம்மா மேல் ஆச்சி

ஏழ்மைதான் கூத்தாடிற்று என்றாலும் இவள்
இடத்தைப் பெருக்கி ஒழுங்குபடுத்தி, இன்னும் கொஞ்சம்
சுத்தமாக வைத்திருக்க முடியும்.

“நீ ஏன் இன்னும் வேலைக்குப் போகல்லே?”

அவளுக்கு விழியோரம் குறுகுறுத்தது.

“கான்ஸ்டேபிள், மரியாதையைக் கோட்டை விடறீங்க.”

“மரியாதையா? கான்ஸ்டேபிளா? கான்ஸ்டேபிளுக்கும்
இன்ஸ்பெக்டருக்கும் உனக்கு வித்தியாசம் தெரியுமா?
நீ இப்படி மரியாதை தவறாப் பேசறதுக்கே உன்னைக்
காரணம் சொல்லாமல் உள்ளே தள்ளிட முடியும், அது
தெரியுமா?”
5