பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ❖ லா. ச. ராமாமிர்தம்

“கான்ஸ்டேபிளுக்கும் இன்ஸ்பெக்டருக்கும் எனக்கு
வித்தியாசம் தெரியும் கான்ஸ்டேபிள். உங்களோடு எனக்
கேன் பேச்சு? வேணும்னா எனக்குக் காவல் வெச்சுட்டு,
ஸ்டேஷனுக்குப் போய் DSP தரணிஸ்வரனுக்கு போன்
போடுங்கோ-long distance இப்போ MPயிலே இருக்கார்னு
நெனக்கிறேன். டிபார்ட்மெண்டுக்குத் தெரியாமல் இருக்காது.
அவரிடம் என்னை யார்னு விசாரியுங்க. ஒண்ணும்
வேண்டாம் என் பேர் சொன்னால் போதும்.”

“இந்த உதார் எல்லாம்...”

“நீங்க இப்படி சொல்விங்கன்னு தெரியும். அதனால்
தான் உங்களையே விசாரிக்கச் சொல்றேன். இல்லை
என்னை அழைச்சுட்டுப் போங்க. உங்க எதிரே நானே
அப்பாவோடு பேசறேன்.”

வந்தவன் சட்டெனப் பின்னிடைந்தான். அவனுடைய
புதிய குளியல், புதிய ஆடை, புதிய ஷவரம், புதிதாய்த்
துளிர் வெட்டின மீசை, மிடுக்கு, யாவதிலும் திடீர் அசடு
வழிந்தது. திடீர் அசடு எப்பவுமே பரிதாபக் காஷி.

“நீ-நீங்க யார்?”

“அதான் சொன்னேனே, அவர் மகள். ஒரே மகள்.”

“உங்கள் வீட்டுக்காரருக்கு என்ன வேலை?”

“Car driver.”

திகைத்து நின்றான். அவனுக்கு வாய் அடைத்து
விட்டது. சுற்றுமுற்றும் இருக்கும் நிலையைக் காட்டி அவன்
கைகள் துழாவித் தவித்தன. அவனுக்குப் புரியவில்லை.

“ஒ இதுவா, பெரியவங்க பேச்சைக் கேக்காமே ஏமாந்த
காதல் கல்யாணத்தின் அவலம். என்னால் அவமானம்
தாங்காமல் அப்பா வடக்கே மாத்திண்டு போயிட்டார். ஆமா,