பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ❖ லா. ச. ராமாமிர்தம்

“என்னது?”

இவள் பிரமிப்பைச் சந்தேகிப்பதற்கில்லை. Geaiune
Shock.

“ஆமாம். கடைசியா அவரை உயிரோடு பார்த்தது நீங்க
தான்னு நினைக்கிறேன். அதனாலே விசாரிச்சு உங்களைத்
தேடி வந்திருக்கிறேன்.”

“இதில் என்னை விசாரிக்க என்ன இருக்கு? இறந்துட்
டாரா? நம்பும் படியாயில்லையே?”

“அதனாலேதான் வந்திருக்கேன்.”

“மாரடைப்பாயிருக்கலாமா?”
“தோணல்லே. கட்டிலுக்குப் பக்கத்துலே சின்ன மேஜை
மேல் தூக்க மாத்திரை பாட்டில். காலி. உங்கள் பேர் மட்டும்
எழுதி ஒரு கவர் ஒட்டல்லே. உள்ளே ரூ. 125. அத்தோடு
தனியா ஒரு நூறு ரூபாய் ஒத்தை ரூவாக்கட்டு.”

“125 என் சம்பளம். இன்னிக்கு கடைசி தேதில்யோ?
100 புரியல்லே. ஒருவேளை எனக்குப் போனஸ்ஸோ
என்னவோ?” புன்னகைக்க முயன்றாள். உடனேயே,
“ஆனால் இது சிரிக்கிற விஷயமில்லே. ஆளுக்கு வயசாச்சு.
தானாய் சாவு நேர்ந்தால் தடுக்க முடியாது. ஆச்சர்யப்
படறதுக்குமில்லை. ஆனால் தற்கொலை ஏன்?”

உடலைப் பரிசோதனைக்கு அனுப்பிச்சால்தான்
தெரியும். தற்கொலையா, கொலையான்னு. இவர் இங்க
Settle ஆகியே இன்னும் அஞ்சு மாஸம் முழுக்க ஆவல்லே.
அதுக்குள்ளே இவருக்கு ஆகாதவங்க யாரு இருக்கப்
போறாங்க. குழப்பம்தான். நீங்க அங்கேவிட்டு நேத்தி
வந்திங்களே. எப்படியிருந்தார்? ஏதேனும் upset-? சத்தே
விவரமா சொல்றீங்களா? இல்லை உங்களுக்கு objection
இருக்குமா?"