பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ❖ லா. ச. ராமாமிர்தம்

எல்லாமே தனிமை ஆகாது. சமுதாயத்துடன்,br> சண்டை போட்டுக் கொண்டேனும் அதன்
நடுவே வாழ்வது தனிமை அல்ல.

மெளனம் தனிமை அல்ல. மெளனத்தில்
உன்னோடு வாழ்கிறாய்.

To be not wanted. அப்படியும் நம்மைச்
சகித்துக் கொண்டு போகிறார்கள் என்பதை
உணர்ந்தும் ஏதும் செய்ய இயலாமல் இருக்
கிறோமே அதுதான் உண்மையான தனிமை.
கூடவே நாளுக்கு நாள் அடுத்து நிமிடத்துக்கு
நிமிடம் ஏறுகிறதே வயதின் சுமை, அது
தனிமை.

இது ஒரு தவிர்க்க முடியாத நிலைமையானா
லும் அதனுடன் சமாதானம் ஆக முடிய
வில்லை!

சமுதாயம் தன்னைப் பத்ரப்படுத்திக்
கொள்ள நட்ட வேலி உறவு. இஷ்டப்பட்ட
உறவு, தாகூடிண்ய உறவு, கட்டாய உறவு என
உறவுகளில் பல விதங்கள் சாயங்கள் உள.
சாயல்கள் இன்னும் வந்துகொண்டேயிருக்
கின்றன. கட்டாய உறவுதான் கடமை.
உனக்கு இஷ்டமிருந்தாலும் இல்லாவிடினும்
செயல்பட்டாகணும். உறவின் நாமத்தில்
சொந்தங்கள் கொண்டாடி ஆகின்றன.
ஆனால் உண்மையில் யார் யாருக்கு எது
யாருக்குச் சொந்தம்? ஒருவரை ஒருவர்
உபயோகிப்பதற்கும் உபயோகப்படுவதற்கும்
உண்டாக்கிய பொய்கள்தான் சொந்தங்கள்.