பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ❖ லா. ச. ராமாமிர்தம்

இருக்கவும் அலுப்பாயிருக்கிறது. எந்தப்
பிடிப்புமில்லை.

பிறக்கையில் எப்படி இங்கு வந்தேன்-அறிய
முடியவில்லை. அப்போது நான் ஒரு உயிர்ப்
பொறி. நினைக்க மனம் இல்லை. மாற்றி
வீறிடலும், உணவும், தூக்கமும் என இந்த
சுழற்சியில் என்று மனம் மலர்ந்ததோ?
இன்று வரை இது மீளா வியப்புத்தான்.

சாவு அத்தனை அப்பாவித்தனமாயிருக்
குமா? இப்போது எல்லாம் மனம் தவிர
வேறு இல்லை. என் மனம் முற்றியிருக்கிறது.
இதோ போகிறேன். போய்க் கொண்டிருக்
கிறேன். போய்விட்டேன். எங்கு போனேன்?
அதுதான் கேள்வி.

ஸ்மரணை தப்பித் தன் கடைசியிரக்கச்
செயலாய் ஆட்கொள்ளுமா?

உயிர்நிலைக்கப்பால் என்னை அணைக்க
என்ன காத்துக்கொண்டிருக்கிறது?

சாவுக்கும் உயிருக்கும் இடைவிளிம்பில்
நிற்கும் வேளை மிக்க நெருங்கிவிட்டது. இனி
இப்பவோ எப்பவோ? கடைசி மூச்சுக்குத்
திண்டாடும் வேளை அந்த ஒரே மூச்சு
அதுவே தான் எனக்கு எல்லாம். அச்சமயம்
என் கடைசி நினைவாக அதில் நர்த்தனமாட
வருவாயா? உன்னில் என் கடைசி மூச்சை
இழந்து மூலப் பிரக்ஞையில் புகுந்து
விடுவேனோ? சொல்லுடி மனோ...நம்மிடை
யில் சொல் ஏது? நீ உணர்த்துவதுதான்
பாஷை.