பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஸ்ருதி பேதம் ❖ 73


தானே அவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்
கேன்!

எனக்கு வாய்த்தவளைப் பற்றி சும்மா><br சொல்லக்கூடாது. அவள் தன்மையில்
இன்றைய மதிப்பீட்டில் 60% தேறி விடுவாள்.
படு சுத்தம். தினம் இரண்டு குளியல். உடை
மாற்றலும் அவ்விதமே. சமையல் வெகு
நேர்த்தி, அஞ்சு பெற்றும் கட்டுத் தளர
வில்லை. கூந்தல் நரையில்லை. படா சுறு
சுறுப்பு. நகை நட்டுமேல் அதிக ஆசை
யென்று சொல்ல முடியாது. T.V., புதுப்புது
ரவிக்கை இவை இரண்டும் அலுக்கவே
அலுக்காது. வம்பு தும்புக்குப் போகமாட்
டாள். மனைவி என்றால் இதற்குமேல்
என்ன வேண்டும்? இப்போது கொஞ்சம்
எதிர்த்துப் பேசுகிறாள். பொதுவாகவே
அதிகம் ஒட்ட மாட்டாள். ‘இன்னிக்கு செத்
தால் நாளைக்கு பத்து’ இது அவள்
வார்த்தைகள்தான்; கொள்கையும்கூட.
நடந்தது நடந்தாச்சு-ஊம் அடுத்தது என்ன?
வாழ்க்கையை மேல் ஒட்ட அப்படியும் ஒரு
ஆள் வேண்டித்தான் இருக்கிறது.

அன்று நான் வயிற்று வலியில் துடித்துக்
கொண்டிருக்கிறேன். எதிரே பீரோக் கண்,
ணாடியில் புது ரவிக்கையில் தன் தோளைத்
திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு
நாளன்னிக்கு ஆவணி அவிட்டம் போளி
தட்டியாகணும். எட்டாநாள் கோகுலாஷ்டமி
உங்களுக்காகப் பண்டிகையைக் குறைக்க