பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஸ்ருதி பேதம் ❖ 75


எரிந்து கொண்டிருந்திருக்கிறாய். தீசலின் வாசனைகூடத் தெரியவில்லை. என் சருகுகள் அத்தனை மெத்தா மனோ? நீதான் அதுகளைப் படிப்படியாகத் தின்று கொண்டிருந்திருக்கிறாய். நான்தான் சுரணை கெட்டவன். சம்சாரத்தில் மாட்டிக் கொண்டால் அப்படித்தான் ஆகிவிடுகிறோம்.

பின்பு ஒருநாள் எதிர்பாரா சமயத்தில்-ஏதோ வியாஜ்யத்தில் பெட்டியில் பழங் குப்பைகளைக் கிளறிக் கொண்டிருக்கையில் என் திருமணப் பத்திரிகை-பாரு இம்மாதிரி பழைய தஸ்தாவேஜிகளைச் சேகரிப்பதில் கெட்டிக்காரி. காணாமற்போன பொருள்களை, பேப்பர்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பதில் அவளுக்குத் தனி ராசி உண்டு. ‘இதோ கண்ணெதிரே இருந் துண்டே...’ என்று முகத்துக்கெதிரே ஆட்டுகையில் எனக்கு அசடு வழியும்.

திருமணப்பத்திரிகை தட்டியதும் அதை யொட்டினாற் போன்ற நினைவும் பதிவுகளும் எழுந்ததும் நெஞ்சில் குபீர், கோலத்தின் நடுவே நின்றபடி நீ-முகத்தில் சிரிப்பு, உள்ளே மூர்க்கம். விழியெனும் வேல் கொண்டு முதுகில் குத்தி விட்டாயேடி! அப்போதிலிருந்து நெஞ்சம் தஹி தஹி தஹி...

மனோ-இதுகூட நான் எனக்காக உனக்குச் சூட்டிய பேர்தான். மனோன்மணி, மனோ