பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ❖ லா. ச. ராமாமிர்தம்

“அடப்பாவி, நானாவது வெச்சிண்டிருந்திருப்பேனே!”...
வார்த்தைகள் கொட்டிவிட்டன. உடனேயே பதறிப்போய்,
“மன்னிச்சுடுங்கோ, என்னவோ உளறிட்டேன்.”

அவர் அதற்கும் பதில் பேசவில்லை. தன் காரியத்தில்
முனைந்திருந்தார்.

அன்று பிற்பகல் சமையலறையில் பற்றுத் தேய்த்துக்
கொண்டிருந்தாள். ஏதோ மெட்டை முனகியவண்ணம் மனம்
குதுகலத்திலிருந்தது.

அழகிய எண்ணங்கள் வாழ்வின் நிர்மால்யம். வதங்க
வதங்க மணம் கூடுதல்-மார்புள் பொங்கலின் எழுச்சி
யில், மாமாவை ‘அப்பா’ என்று அழைத்துப் பார்த்துக்
கொள்ளணும்போல் ஆவலாய், ஆசையாய், சந்தோஷமா
யிருந்தது.

மோப்பம் போன்ற ஒரு விலங்கு அறிவு எச்சரிக்கை
செய்து அவளைக் கலைத்தது. சட்டெனத் திரும்பினாள்.

வாசற்படியில் நின்றார். முகத்தில் காங்கை. கண்கள்
அவள்மேல் குவிந்திருந்தாலும் அவைகளில் பார்வை
யில்லை.

அவளிடம் வந்து இரு தோள்களையும் பற்றித் தன்
பக்கம் திருப்பினார். அவளுக்கு வெலவெலப்பைவிட
வியப்புதான் அதிகம் உணர்ந்தாள்.

அவள் முகத்தில் அவர் கண்கள் தேடின. அவளை
அடையாளம் கண்டுகொண்டதும் தணலைத் தொட்டாற்
போல் கைகளை உதறி பின்னடைந்தார்.

“Oh God! என்ன தவறு செய்தேன்! இவ்வளவு
பெரிய தப்பு! காலம் இடம் இமேஜ் எல்லாம் குழம்பிப்
போச்சு. Oh God! Oh God!! என்னை மன்னிச்சுக்கோம்மா!
மன்னிச்சுடு!”