பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



5


பாப்பூ


மணி பத்தைத் தாண்டிவிட்டது. ஆனால் இருவரும்
அவரவர் இடத்தை விட்டு நகரவில்லை. சமையல் எப்பவோ
ஆறிப்போயிருக்கும். ஆனால் சாப்பிட இருவருக்குமே
தோன்றவில்லை. வாழ்க்கையில் ஒரு இடைவெளிக்குப் பின்
பசி தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. பழக்கத்
துக்குப் படிந்ததாய்ப் போய் விடுகிறது. சாப்பிடற வேளையா,
சரி, சாப்பிட்டுத் தொலை, காரியத்தை முடி.

பேச்சுக்கூட, கொஞ்ச நேரமாக அவர்களிடையே
அடங்கிவிட்டது. சண்டை பூசல் கிடையாது. வாக்குவாதம்
அவர்களிடையே அதிகம் நேர்வதுமில்லை.

யோசனை? அதற்கென்ன, முடிவே இல்லை
என்கிறோம். அதுகூட தொடர்ந்த கோடியை அடைந்த
வுடன், அதை மறித்து, வெறித்த மதிலில் முட்டிக்கொண்டு
நின்று விடுகிறது. சற்று நேரம்தான் அப்படி; என்றாலும்
யுகக் கணக்கில் அங்கேயே சிக்கிக் கொண்டாற் போன்ற
சலிப்பு.

சுவர்க்கடியாரத்தில் வினாடிகள் நொடித்தபடி.

“டொக் டொக்.”

--- ? ---

“டொக் டொக்.”