பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பாப்பூ ❖ 83


“வஸூ, வ்யாஸ் எப்படிப்பட்டவன் தெரியுமா?
சொக்கரப்பொன், ஏன் இப்படி ஆனான், தெரியல்லியே!<br? சரி நாளைக்குப் பார்த்துக்கலாம். வா, சாப்பிடப்
டோவோம்.”

வஸூதாவுக்குத் தூக்கம் வரவில்லை. படுக்கையில்
புரண்டாள். தூக்க மாத்திரை போட்டுக்க வேண்டியதுதான்.
ஆனால் இப்பவே மணி ஒண்ணுக்கு மேலாச்சு. இனிமேல்
போட்டு, எப்போ மாத்திரை பிடிச்சு எப்போ தூக்கம் வரது?
அப்படியே வந்தாலும் காலையில் அடிச்சுப் போட்ட மாதிரி
ஆயிடும்.

ஏதோ உந்தலில் சட்டென எழுந்து ஹாலுக்கு வந்தாள்.
விருந்தாளி எப்படியிருக்கான்?

ஸோபாவில் மல்லாந்து கட்டையாய்க் கிடந்தான்.
பக்கத்தில் போய்ப் பார்த்தாள். பகீரென்றது.

“ஸ்வேதா!” இல்லை-அடக்கிக் கொண்டாள். இன்னும்
கிட்ட வந்து நோக்கினாள். நைட் பல்பின் நீலத்தில் மார்பின்
லேசான மிதப்பல்-மூச்சுத் தானே? தூக்கத்தில் ஏதோ
குழந்தைத்தனம்-அபலை நிலை; எடுத்து அடைத்துக்
கொள்ளணும் போல்-கூடவே அவனைப் பார்க்க அச்சமா
யிருந்தது. இது விலங்குத் தூக்கம்; இந்த அயர்வுக்கடியில்
ஒரு விழிப்பு காவல் காப்பதுபோல்...

அரைக் கண்மீது ரப்பைகள் சுருண்டன.

ஏதோ முனகிக் கொண்டு புரண்டான். அதற்கு மேல்
அவளுக்கு பயமாயிருந்தது. மீண்டாள்.

பக்கத்தில் உறங்கும் ஸ்வேதாவைச் சிந்தித்தாள்.
ஸ்வேதா பக்கத்தில் படுத்திருப்பதே ஒரு கேலிக்கூத்து! ரியலி
ஹேண்ட்ஸம் மேன். ஆம், வந்திருக்கும் விருந்தாளியை விட
ஸ்வேதாவும் தூக்க மாத்திரைக்காரன்தான். ஒருவருக்