பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அலை தந்த ஆறுதல்

கூடாதா? கத்தரிக்காய் சொத்தை வெண்டைக்காய் விறகு!” என்று வீட்டு நிதிமந்திரி மனைவி, குறை கூறி என்மீது அடுக்கிய குற்றங்களை அள்ளிவீசி என்னை ஒரு ‘முப்புரம் ஆக்கிவிட்டார். நாட்டு நடப்புத் தெரியாமல் எப்போதோ நண்பர் ஒருவர் சொன்ன விலையை மனத்தில் கொண்டு ஏதோ சொல்லிவிட்டேன். அவ்வளவு தான்! பூத்தொடுத்தாற்போல் பொய் சொல்லும் கலைவராத எனக்கு உண்மை பேசத் துணிவில்லை. அரிச்சந்திரன் உண்மை பேசிய காரணம் இப்போது புரிந்தது. என்னைத் தண்டிப்பதில் மகாத்மா காந்தி வழியைக் கடைப்பிடிப்பவள் என் மனைவி.உண்ணாவிரதம் இருந்தாள் பேச மறுத்தாள்.என் குலக் கொழுந்துகள் எப்பொழுதுமே எனக்கு எதிர்கட்சி தான். நான் தனித்து விடப்பட்டேன். சிக்மண்ட்ஃபிராய்டு கூறியதைப்போல் மனத்தைக் குழந்தை நிலைக்கு ஆக்கிக் கொண்டேன். என்னை விடப் பெரியவர்கள், போட்டோவில் தான் இருக்கிறார்கள். நான் குழாய்த் தண்ணிர் குடித்தபோதே உலக வாழ்வை நீத்தவர்கள் அவர்கள்.

என்னை உருவாக்கிய பெருமகனாரின் சிரித்த முகநிழற் படத்தைக் கண்டேன். ஒரு பளிச் மனித உறவுகள் யாவும் பணத்தின் வலிமையில்தான் சுழல்கின்றன என்பதனையும் புரிந்து கொண்டேன்.

தொலைபேசி ஒயாமல் மணி அடித்து அடித்து என்னைக் கூவியவண்ணம் இருந்தது. பரிந்துரைகள், அழைப்புகள் மிரட்டல்கள், போதாக்குறைக்கு வாசலில் பார்வையாளர்கள். சே! என்ன போலி வாழ்க்கை!

அலுவல் காரணமாகத் திருப்பதி செல்வதாகக் கூறி ஒரு பையை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.